இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. உலகில் இன்பந்தரும் இனிய சொல்லிருக்க வேதனை தரும் கடும் சொல் கூறுவது தன்னிடம் உள்ள கனியை உண்ணாது இனிமையற்ற காயை உண்பது போன்றதாகும்.உலகில் மக்கள் இனிய நல்ல சொற்களை வாய் திறந்த பேசுவதை விட்டு மக்களுக்கு மனதுக்கு வேதனை தரும் சொற்களை பாவித்து மற்றவர்களின் மனங்களை புண்படுத்துவது மக்கள் தங்களிடம் இருக்கும் கனிந்த பழத்தை உண்ணாது கனியாத காயை உண்பது போல் ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.டென்மார்க் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments