அறன் நோக்கி ஆற்றுங் கொல் வையம் புறன்நோக்கி புன்சொல் உரைப்பான் பொறை. புறங்கூறித் திரிபவன் உடலையும் உலகம் சுமக்கிறது என்பது அறம் காக்கவேயாகும்.மனிதர்களின் முகத்துக்கு முன் எதுவும் சொல்லாது நல்லவர்கள் மாதிரி சமுகத்தில் வாழ்ந்துகொண்டு அதே மனிதர்களைப்பற்றி இந்த உலகிற்கு புறம் சொல்லித்திரிபவர்களின் உடல்களையும் பூமி தாங்குதென்றால் மனிதர்களின் அற வாழ்வினை காக்கவேண்டும் என்பதற்காகவே என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .
Comments