21/205:திருக்குறள் -தீவினையச்சம்

இலன் என்று தீயவை செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.ஒருவன் தன் வறுமையை போக்கிக் கொள்ள பிறர்க்கு தீமை செய்தல் கூடாது அவ்வாறு செயவானின் முன்னிலும் வறுமையில் வாடுவான். மனிதர்களின் வாழ்வில் மனிதர்கள் தங்களின் கஸ்டங்களை போக்கி கொள்ள பிற மனிதர்களுக்கு தீமை இளைத்தல் கூடாது அப்படி தீமையால் மாற்று மனிதர்கள் பாதிப்படைந்தால் இப்ப இருக்கின்ற வறுமையை விட கூடுதலான வறுமையில் வாடி வாழ்வை கழிக்க நேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் . 

Comments