எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. யார் வாய் வழியாகவும் எச்சொல் வந்தாலும் அச்சொல்லின் உண்மையை உணர்வதே அறிவு.இந்த உலகின் மானிடர்களின் வாழ்வுதனில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் தங்களிடம் உள்ள அறிவுபூர்வமான நற்சிந்தனைகளையும் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவிரும்புவார்கள் அப்படி வருகின்ற எச்சொல் ஆயினும் அச்சொல்லின் உண்மையை உணர்வதே அறிவுடமையாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.
Comments