திருக்குறள் - 447
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
பொருள்:
தவறுகளைச் சுட்டிக்காட்டும் சான்றோரையும் நண்பர்களையும் துணையாகக் கொண்டு வாழ்பவரை, யாராலும் கெடுக்கவோ அழிக்கவோ முடியாது.
விரிவாக்கம்:
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவறுகள் நிகழ்வது இயல்பு. அந்தத் தவறுகளை நம்மைச் சுற்றியிருப்பவர்களே சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்டும் போது, தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு மனிதர்களுக்கு அமைகின்றது. தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துகின்ற உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஒருவரின் சுற்றுச்சூழலில் அமைந்தால், அந்த மனிதரையோ அல்லது அந்தச் சமுதாயத்தையோ யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை இக்குறள் எடுத்துரைக்கிறது.
சிந்தனை வரி:
"உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால், உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்றுபொருள்."
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்
பாலாஜி பாலசுப்பிரமணியம்
Comments