எண்பத்த்தான் ஒரா முறைசெய்யா மன்னவன் தண்பத்த்தான் தானே கெடும்.நீதி வேண்டியோர் எளிதாக்கண்டு பேசத்தக்க நிலையிலிருந்து அவர் கூறியவற்றை ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் கீழ் நிலையடைந்து தானே கெடுவான்.நீதி கேட்டு வரும் மக்களின் நிலையை அறிந்து அவர்களின் வார்த்தைகளை எளிதாக புரிந்துகொண்டு அவர்கள் கூறியவற்றிலிருந்து சரி பிழைகளை சீர் தூக்கிப்பார்த்து நடுநிலையுடன் ஆட்சி செய்யாத ஆளுனர்கள் மக்களின் வெறுப்புகளுக்கு ஆளாகி அழிந்து போவர்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments