60/596:திருக்குறள்-ஊக்கம் உடைமை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.உயர்வானவற்றையே எண்ண வேண்டும்.அவை தவறினும் அவ்வெண்ணம் கைவிடல் ஆகாது.உலகவாழ்கைக்குள் மனிதர்களாகிய நீங்கள் என்றும் உயர்ந்த சிந்தனையை சிந்திப்பதே வாழ்கைக்கு உயர்சியடைய செய்யும்  அந்த வானுயர்ந்த  சிந்தனை ஒரு வேளையில் தவறிப்போனாலும் உங்களின் வான் உயர்ந்த எண்ணங்களை கைவிட்டு வேறு எண்ணங்களுக்கு மாறுவது உங்கள் வாழ்கைக்கு உகந்ததல்ல என எடுத்துரைக்கின்றது  திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்

Comments