60/598:திருக்குறள்- ஊக்கம் உடைமை

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு.மன உறுதியில்லாதவர் தான் பெருஞ்செல்வ முடையவர் எனும் சிறப்பை அடையவியலாது.மனிதர்களுக்கு மன உறுதிவேண்டும் மனதில் உறுதியில்லாதவர்களுக்கு எவ்வளவு செல்வம் இருப்பினும் அச்செல்வத்தால் சிறப்பிருக்காது அதனால் மனிதர்கள் மனதை உறுதிப்படுத்தி வாழ்வை சிறப்பாக்க வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும்   ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

Comments