61/607:திருக்குறள்-மடி இன்மை

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்  மடிபுரிந்து மாண்ட உஞற்றிலவர். சோம்பலை விருப்பி நல்லுழைப்பை கைவிட்டவர்  பலரால் இகழ்ந்தும்.கடிந்தும் பேசக்கேட்க நேரிடும்.மனிதர்களின் வாழ்வில் வேலைகளைக்கு செல்லாது சோம்பலில் வாழ்வை கழிக்க விருப்பும் மனிதர்களுக்கு கிடைத்த நல்ல வேலையை தங்கவைத்து கொள்ள முடியாமல் போகும் அதனால் நல்லுழைப்பு கெட்டுப்போகக்கூடிய வாய்பு உண்டு  இதனால் பல பிற மனிதர்களால் இழிவாக பேசப்படுவார்கள் வேலை வெட்டி இல்லாத மனிதர்களை இந்த உலகம் இகழ்வதைக் கேட்டு மனவருத்தமடைய  நேரிடுமென  எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

Comments