65/643:திருக்குறள்-சொல்வன்மை

கேட்டார்ப் பிணிக்குந்  தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்.கேட்பவரை கவர்ந்தும் கேளாதவரை கேட்க தூண்டும் வகையிலும் சொல்வதே சொல் எனப்படும் .மனிதர்களால் ஒரு சொல் சொல்லப்பட்டால் கேட்டுக்கொண்டிருப்பவர்களை கவர்ந்திழுக்கவேண்டும் கேளாதவர்களும் கேட்டு மகிழச்சியடையும் வண்ணம்  கவர்ந்திழுக்கும் வகையில் சொல்லைச்சொல்வதே சொல்திறன் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும்  பொருளும்  விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments