சொலல்வல்லான் சோர்விலன் அஞ்சான்அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. சொல்லை பிறர் ஏற்குமாறு சொல்பவர்.சொல்லை மறவாதவர் சபைக்கு அஞ்சாமல் சொல்பவர் இவரை எவரும் வெல்லுதலரிது.பேசக்கூடியவர்கள் பேசியே சபையோரை ஈர்த்து விடுவார்கள் அதனால் மனத் துணிவுள்ளவர்களை யாராலும் வென்று விடமுடியாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments