70/693:திருக்குறள்-மன்னரைச் சேர்ந்தொழுகல்


போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. பெரும் பிழைகள் வாராதப்படி காத்துக் கொள்ளவேண்டும் அரசர் சந்தேகம் கொண்டபின் தெளிவித்தல் அரிது .மேல் அதிகாரிகளுக்கு சந்தேகம் வருகின்ற மாதிரியான பெரிய பிழைகளை செய்துவிடக்கூடாது அப்படி செய்து அது அவர்களுக்கு தெரிய வந்தால் பிழைகளை திருத்தவும் முடியாது அவர்களுடன் பேசி தெளிவு படுத்தி தீர்த்துக்கொள்ளவுதும் கடினமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments