79/782:திருக்குறள்-நட்பு


நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்நீர பேதையார் நட்பு.நல்லோர் நட்பு வளர்பிறைத் திங்களின் தன்மையுடையது அறிவிலார் நட்பு தேய்பிறையின் தன்மையுடையது.அறிவுடையார் நட்புறவு நல்லறிவை வளர்க்கவல்லது.அறிவுள்ளவர்களுடன் நட்புறவு கொள்வது வாழ்கையை உயர்த்தி செல்லும் அறிவிலார் நட்புறவு வாழ்வினில் தேய்பிறை போன்றது அறிவில்லாதவர்கள் போல வாழநேரிடும் அத்துடன் வாழ்வை சிறந்த வழியில் இட்டு செல்லாது என்பதே வாழ்வின் வாழ்கை நெறியாகும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவத
ு நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments