82/818:திருக்குறள்-தீ நட்பு


82/818:ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.தம்மால் முடியும் காரியத்தை செய்ய விடாமல் தடுப்பாரின் நட்பை சொல்லாமல் தளர விடுக.எங்களால் முடியுமென்று முயற்சியெடுத்து நிறைவேற்றும் விடயங்களை செய்யவிடாது தடுத்து நிறுத்தும் நட்பினை அவர்களுக்கு தெரியாமலே மெல்ல மெல்ல விட்டு விடுவது வாழ்வியலுக்கு என்றென்றும் சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments