வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.செயலைச் செய்ய வழிகளை ஆராயமல் தவறு செய்பவனாய் வரக்கூடிய பழிகளை கருதாதவனாய் நற்குணமற்றவனாய் உள்ளவன் பகைவரால் எளிதாக வெல்லப்படுவான்.சிறந்த முறையில் படிக்காதவன் நீதி நூல்களை அறியாதவன் செய்யும் செயல்களின் வரும் பாவங்களை பெரிதாக கருத்தில் கொள்ளாதவன் நற்சிந்தனையும் நற்குணங்களுமில்லாதவனை எதிரிகள் சுலபமாக வெண்றுவிடுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments