பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் . ஆண்மையைக் காக்காது பெண் ஆசைக்கொள்பவன் செல்வம் பெரும் இழிவை உண்டாக்கி அவனை நாணும்படி செய்யும் . ஆண்களின் வாழ்வில் பெண் ஆசை கொண்டு ஆண்மையை பாதுகாத்து கொள்ளாது மனம் போன போக்கில் வாழும் ஆண்களுக்கு அவர்கள் உழைத்து சேர்த்த பணமும் பொருட்களும் தாழ்வான நிலை சென்றடையும் அத்தோடு சமுதாயத்தில் நல்ல பெயரையும் கெடுத்துகொண்டு சமுதாயத்தில் மற்றவர்களுக்கு அஞ்சி வாழநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments