99/987:திருக்குறள்-சான்றாண்மை


இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பபு.தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யாவிடின் நிறை குணத்தின் பயன் என்ன? பொல்லாங்கு செய்த மனிதர்களுக்கும் நன்மையே செய்வேண்டியது நல்ல மனம் உள்ள மனிதர்களின் கடமையாகும் அப்படி இல்லாவிட்டால் நிறைந்த குணம் இருந்தும் அதனால் சமுதாயத்திற்கு என்ன பயன் ? எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments