1/6: கடவுள் வாழ்த்து திருக்குறள்






1/6:

திருக்குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொருள்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வழியே வரும் ஆசைகளை அடக்கிய இறைவனின் மெய்யான ஒழுக்க நெறியில் நின்று வாழ்பவர், நிலவுலகில் புகழோடு நீண்ட காலம் வாழ்வர்.

விரிவாக்கம்:

மனிதர்கள் தங்கள் வாழ்வில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் நல்வழியில் கட்டுப்படுத்தி, இறைவன் காட்டிய நல்லொழுக்க நெறியில் வாழ வேண்டும். அவ்வாறு புலனடக்கத்தோடும் நெறிதவறாமலும் வாழ்பவர்கள், இந்த உலகில் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடனும் சிறப்புற்று வாழ்வார்கள் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.



English Translation:

Thirukkural:

Porivaayil Ainthavithaan Poytheer Ozhukka

Nerinindraar Needuvaal Vaar.

Meaning:

Those who walk in the flawless path of righteous conduct, taught by the Lord who mastered the five senses, will live a long and glorious life.

Explanation:

Mastering the five physical senses and upholding high moral standards are essential for a peaceful existence. Those who exercise self-control and live a life guided by truthful principles earn lasting respect and enjoy a long, harmonious life.


Comments