1/7 :கடவுள் வாழ்த்து திருக்குறள்


1/7:

திருக்குறள்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்:

தனக்கு ஒப்புமை எதுவும் இல்லாத இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்க்கன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது மிகவும் கடினமாகும்.

விரிவாக்கம்:

மனித வாழ்க்கையில் எழும் பலவிதமான மனக்கவலைகளிலிருந்து விடுதலை பெற இறைவனின் தூய்மையான வழியைப் பற்றுவதே சிறந்த வழியாகும். இறைவனின் திருவடிகளை மனதார நம்பிச் சரணடைபவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்; மாறாக, அகந்தையினாலும் நம்பிக்கை இன்மையாலும் அதை மறுத்து வாழ்பவர்களுக்கு மனக்கவலையை அகற்றுவது எளிதல்ல என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.

தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.


English Translation:

Thirukkural:

Thanakkuvamai Illaathan Thaalsernthaark Kallaal

Manakkavalai Maatral Arithu.

Meaning:

Anxiety of the mind cannot be cured except for those who yield to the feet of Him who has no equal.

Explanation:

Human life often brings unpredictable cares and worries. Finding true inner peace requires faith and surrender to the Supreme Being, who is beyond comparison. Those who anchor their minds in divine grace find refuge from distress, whereas those who ignore this higher path struggle to find lasting mental tranquility.


Comments