2/16:
திருக்குறள்:
விசும்பின் துளிவீழ்ந்தா லல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பொருள்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அன்றி, மண்ணில் பசும்புல்லின் நுனியைக் கூடக் காண்பது அரிதாகும்.
விரிவாக்கம்:
வான்மழை பொழியாவிட்டால் நிலத்தில் பசுமையைக் காண முடியாது; தாவரங்களில் புதிய துளிர்கள் தோன்றாது. சிறிய புல்லின் நுனியில்கூடப் பசுமை அரும்ப முடியாது என்பதால், தாவர இனங்கள் அனைத்தும் அழிந்துவிடும் சூழல் உருவாகும். மிகச் சிறிய புற்கள் முதல் பெரிய மரங்கள் வரை அனைத்துத் தாவரங்களின் வளர்ச்சிக்கும் வான்மழையே அடிப்படை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
English Translation:
Thirukkural:
Visumbin Thuliveezhnthaa Lallaalmar Traangge
Pasumpul Thalaikaanpu Arithu.
Meaning:
Unless raindrops fall from the sky, even the tiny blade of green grass cannot show its head.
Explanation:
Rainfall is essential for the origin and growth of all plant life. If the heavens withhold rain, even the smallest and humblest forms of flora, such as simple grass, fail to sprout. Without rain, the green canvas of the earth fades away, halting all natural life cycles.
https://azhagi.com](https://azhagi.com) noblehearted@

Comments