Posts

Showing posts from September 18, 2018

19/183:திருக்குறள்-புறங்கூறாமை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலில் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் பிறரைப் பழித்துப் பேசி உயிர்வாழ்வதைவிட இறப்பதால் அறத்தின் பயன்கிட்டும்.மனிதர்கள் பார்க்கும் இடத்தில் ஒரு மாதிரி பேசியும் பார்க்காத இடத்தில் வேறுறோரு மாதிரி பேசி வாழும் மனிதர்கள் வாழ்வதை விட இறந்தே போனால் சமுகத்துக்கு நலன் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/182:திருக்குறள்-புறங்கூறாமை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. அறம் தவறி தீங்குச் செய்வதினும் தீமையானது பின் இகழ்ந்துப் பேசி, முன்புகழ்ந்து பேசுவதாகும். மனிதர்கள் மனிதர்களை நேரில் சந்திக்கும் போது நன்றாக சிரித்து சந்தோஷமாக பேசுவார்கள் அதே மனிதர்கள் அகன்ற பின் அவர்களை பற்றி இகழ்ந்து செப்பித்திரிவது சிறந்த வாழ்க்கை நெறிகள் அல்ல என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/181:திருக்குறள்-புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிய . ஒருவன் அறத்தைப் பழித்து தீமைச் செய்யினும் அவனைப் பழிச் சொல்லாதவன் என்று கூறக்கேட்டால் இனிது.மக்கள் சமுதாயத்தில் அறநெறிகளை கூறி பின்பற்ற விட்டாலும் மற்றைய மக்களைப்பற்றி புறம்கூறாமல் இருக்கின்றார்கள் என்று கேட்டால் இனிதே. என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

18/180:திருக்குறள்-வெஃகாமை

இறல் ஈனும் எண்ணாது  வெஃகின்  விறல் ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.பின் நிகழ்வதை அறியாமல் பிறர் பொருளை விரும்பினால் அதனால் அழிவு உண்டாகும் ,பிறர் பொருள் வேண்டாம் என நினைக்கும் வீரமே வெற்றி கொடுக்கும்.அடுத்தவர்களிடமிருக்கும் பொன் பொருளுக்கு ஆசைப்படும் மனிதர்களுக்கு பின் வரும் இன்னல்கள் தெரிவதில்லை அது ஒரு நாள் அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் அடுத்தவர்களின் உடமைகள் எமக்கு தேவயில்லையென்று வாழ்வதே வாழ்வுக்கு சிறப்பு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

18/179:திருக்குறள்-வெஃகாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்தாங்கே திரு. மற்றவர் பொருள் மீது ஆசை கொள்ளாதிருப்பதே அறம் என்றறிந்த அறிவுடையோர் தம்மை திருமகள் தாமே சென்றடைவாள். அடுத்தவர்கள் உடமைகள் மீது  ஆசை கொள்ளாமல் இருப்பதே சிறந்த வாழ்வு நெறிகள் தெரிந்தவர்களுக்கு தங்களை இலட்சுமி தானாகவே சென்றடையும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

18/178:திருக்குறள்-வெஃகாமை

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப்பொருள்.ஒருவன் செல்வம் குறையாமல் இருக்கவேண்டுமாயின் அவன் பிறர் விரும்பி வைத்திருக்கும் பொருளைக் கவர ஆசை கொள்ளாதிருக்கவேண்டும் .இந்த உலகில் மனிதர்களின் ஆசை என்பது அளவில்லாத ஓன்று மாற்று மனிதர்கள் வைத்திருக்கும் உடமைகள் மீது ஆசைப்படாமல் இருத்தல் மிக அவசியம் அவ்வாறு செல்வந்தர்கள் செயல்ப்பட்டால் செல்வந்தர்களிடம் இருக்கும் செல்வங்கள் அழியாது இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

18/177:திருக்குறள்-வெஃகாமை

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் பிறர் பொருளை கவர்வதால் வரும் பயனை விரும்பக் கூடாது அவ்வாறு பெற்ற பொருளின் பயன் சிறப்பற்றது.சமுதாயத்தில் வாழும் மக்கள் சமுதாயத்தின் உடமைகளையோ தனியாரின் சொத்துகளையோ தங்களின் உடமையாக்கிக்கொள் விரும்பக்கூடாது அப்படியான முறையில் செர்க்கும் செல்வம்கள் என்றுமே நல்ல பயனையும் நல்ல மனிதர்கள் என்ற பேரையும் தந்துவிடாது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

18/176:திருக்குறள்-வெஃகாமை

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி பொல்லாத சூழக் கெடும்.அருள் ஒழுக்கத்தில் சிறந்தவன் , பிறர் பொருளை வேண்டி அதைக் கவர தீயவழிகளில் செல்வானின் அவன் ,அருள் ஒழுக்கம் கெட்டுவிடும.நல்வினை சமுதாய வாழ்வில் சிறந்தவர்கள் சமுகத்தின் இன்னொருவருடைய உடமைகளை தங்களுடையதாக்கி கொள்ள பல கெட்ட வழிகளில் சென்றால் அவர்களின் நல்வினை வாழ்வியல் ஒழுங்குகள் கெட்டுப்போகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

18/175:திருக்குறள்-வெஃகாமை

அஃகி அகன்ற அறிவைன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் . கற்ற அறிவுடைய ஒருவன் பொன் பொருள் வேண்டி அறிவற்ற குற்றங்களைச் செய்வானாயின் அவன் கற்றறிந்த நூலறிவின் பயன் என்ன ? படித்து அறிவுள்ள மனிதர்கள் செல்வங்களின் தேவைக்காக அறிவில்லாத பல குற்றங்களை புரிந்தால் அவர்கள் கற்று தெளித்த நூல்களின்  பயன்தான்  என்ன ? என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .