Posts

Showing posts from September 15, 2018

16/151:திருக்குறள்-பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை. நிலம் தன்னைத் தோட்டுவாரையும் சுமந்து நிற்கும் அதுபோல தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறப்பு.இந்த உலகில் மனிதர்கள் பூமித்தாயின் மேல் நின்று கொண்டே தங்களுடைய தேவைகளுக்காக குழிகளை வெட்டுவார்கள் அது தெரிந்திருந்தும் பூமித்தாய் மனிதர்களை சுமந்துகொள்வது போல மனிதர்களும் தங்களுக்கு வந்து சேருகின்ற அவமதிப்புகளையும் அதனை தருகின்றவர்களை பொறுத்துக்கொண்டு வாழ்வில் சிறப்புகளை அடைவது மனிதர்களுக்கு தனிச்சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

15/150:திருக்குறள்-பிறன் இல்விழையாமை

அறன்வரையான் அல்ல செயினும் புறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று . அறம் தவறி தீமை செய்தாலும் பிறர் மனைவியை விரும்பாமல் இருப்பது நன்மையாகும்.வாழ்க்கையில் பல நன்மையில்லாத விடயங்களை செய்தாலும் இன்னொருவருடைய மனையாள் மீது ஆசை கொள்ளாது இருப்பது சமுகத்தாருக்கு நன்மையாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/149:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார்.கடல் சூழ்ந்த இவ்வுலகில் அனைத்து நன்மைகளுக்கும் உரியவர் யாரெனில் பிறன் மனைவியின் தோள்களைத்தழுவாதவனே.கடல் சூழ்ந்த புவியியல் மீது எல்லா நலன்களையும் பெற்று வாழ்கின்ற மனிதர்கள் யார் என்று பார்த்தால் பிறருக்கு சொந்தமான மனையாளையும் பிறருக்கு சொந்தமான மணவாளானையும்  தங்கள்வசமாக்கி கொள்ளாதவர்களே இந்த உலகில் சிறப்பான இல்லறவாழ்வில் சிறப்பானவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

15/148:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.மாற்றன் மனைவியை விரும்பி நோக்காத பெரும் வீரம் நல்லோர்க்கு.முறையாகும் மேலும் ஒழுக்கத்தையும் கொடுக்கும் . அடுத்தவர்களின் மனையாளை பார்க்காத மிக பெரும் துணிவு நல்லவர்களுக்கு  நல்ல பழக்கமாகும் அது சிறந்த சிறப்பையும் கொடுக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

15/147:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

அறனியலான் இல்வாழ்பவன் என்பான் பிறனியலாள் பெண்மை நயவாதவன்.அறத்தைடன் கூடி இல்லறம் நடத்துபவன் யாரெனின் மாற்றான் மனைவியின் சுகத்தை விரும்பாதவனே . நல்லகொள்கைகளுடன் சேர்த்து இல்லறம் நடத்தும் மனிதர்கள் இன்ரொருவருடைய மனையாளிடம் சிற்றின்பத்தை அனுபவிக்க விருப்பமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/146:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

பாகை பாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.பாகை பாவம் பழி அச்சம் என்ற நான்கும் பிறன் மனையாளை அடைய எண்ணுபவனை விட்டு  நீங்காது.விரோதம் தீய செயல்கள் பழிசூழ்ந்தநிலைகள் இந்த  நாலும் இன்ரொருவருடைய மனைவியை அனுபவிக்க நினைக்கும் போது  அவர்களை விட்டு நீங்காது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/145:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்து மெஞ்ஞானம் விளியாது நிற்கும் பழி . இவளையடைதல் எளிதென்று எண்ணி பிறன் மனைவியை அடைய விழைபவன் நீங்காத குடிபழிக்கு ஆளாவான்.இந்தப் பெண்ணை அடைவது சுலபம் என்று நினைத்து பிறருடைய மனைவியை  அடைமுயற்ச்சிப்பவர்கள் என்றுமே அழிக்க முடியாத குடும்ப பழிக்கு ஆளாவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/144:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

எனைத்துணையார் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.அறிவின்றி அயலான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு சிறந்த அறிஞனாயிருப்பினும் இகழப்படுவனே  வேறொருவரின் மனைவியை விரும்பும் மனிதனை அவன் எத்தகைய அறிவாற்றல் கொண்டவராக இருந்தாலும் சமுதாயத்தால் அவமான படுத்தப்படுவான் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/143:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

விளித்தாரின் வேறல்லர் மற்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார் . நம்பியவனின் மனைவியிடத்தே தீமை செய்து வாழ்பவன் உயிருடன் இருந்தாலும் அவன் அறிவற்றவன் ஆதலால் இறந்தவனாக கருதுவார் . விசுவாசம் உள்ள ஒருவரின் மனைவியிடத்தில் கூடாத உறவு முறையை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவன் உயிர் உடலி இருந்தாலும் அறிவில்லாத வடியால் அவன் இறந்தவனாகவே கருதப்படுவான் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/142:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.அயலான் வாயிற்சென்று அவன் மனைவியின் பால் நிற்பவரைப் போல் அறிவிலியும் பெரும் பாவியும் யாருமில்லை.அன்னியன் வீட்டு வாசலுக்கு சென்று அவன் மனைவியை விரும்பி நிற்பவர்கள் அறிவில்லாதவர்களும் மகா கொடியவர்கள் இவர்களை விட யாரும் இருக்கமுடியாது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/141:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

பிறன்பொருளாள் பொட்டொழுகும் பேதமை ஞாலத்து அறம்பொருள் கண்டார் கண் இல் .பிறன் மனைவியை விரும்பும் அறியாமை அறம் பொருள் அறிந்தவரிடமிருப்பதில்லை. இன்நோருவருடைய மனைவி மீது ஆசைப்படும் விளக்க தன்மை உலகத்தின் சமுதாயத்தின் நீதி நேர்மை நல்லொழுக்கம் தெரிந்தவரிடத்தில் இருக்காது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

16:ஆத்திசூடி

16:சனி நீராடு:சொற்பொருள்:சனிதோறும்,நீர் ஆடு எண்ணெய் தேய்த்து குளி தண்ணீரில் மூழ்கி குளி .சனி என்பதற்கு குளிர்ந்த நீரில் என்ற பொருளும் கொள்வர் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து முழுக வேண்டும் விரிவாக்கம் : ஒவ்வொரு சனிக்கிழமையில் நல்ல எண்ணை வைத்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய்  அல்லது அரப்பு வைத்து  நன்றாக தலையில் முழுகவும் உடலுக்கு நலம் தருமென எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள் ஞானக்குறள் விரிவாக்கம்பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

15:ஆத்திசூடி

15 ஙப் போல் வளை சொற்பொருள்: “ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். கருத்து .ங :எனும் எழுத்தைப் போல் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும்.விரிவாக்கம் :சமுதாயத்தின் வாழ்க்கையின் நெறிகளில் முதியோர்களையும் உயர்ந்தோர்களையும் குருமார்களையும் ஆசிரியர்களையும் உயர் பதவிகளை வகிப்பவர்களையும் மதிக்கபழவேண்டும் எனவும் அவர்கள் முன் தாழ்மையான முறைகளில் சிரம்தாழ்த்தி வாழ்வதே சிறந்த வாழ்வியல் சிற்பென எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள்  குறளும்  பொருளும் விரிவாக்கமும் .பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

14:ஆத்திசூடி

14:கண்டு ஒன்று சொல்லேல். சொல்பொருள்:கண்டு ஒன்றைக் கண்டு:ஒன்றுகாணாத வேறு ஒன்று; சொல்லேல்  சொல்லாதே.கருத்துநேரில் கண்டதற்கு மாறாக எதுவும் சொல்லாதே அதாவது கண்டது ஒன்றாயிருக்க அதைத் திரித்து, காது மூக்கு வைத்துப் பெரிதாக்கிப் பேச்சதே.கண்ணால் கண்டதற்கு மாறாக எதுவும் கூறலாகாது. விரிவாக்கம்:பார்த்ததையையும் கேட்டதையும் மட்டுமே நினைவில் நிறுத்தி பேசவேண்டும் நீங்களாக இயற்றி பார்ததையும் கேட்டதையும் அதக்க்கு மேல் சில வற்றை கூடவைத்து செப்பிதிரிவது ஆகாது என எடுத்துரைங்கின்றது திருஞானக்குறள்.தினமும். ஒரு திருஞானக்குறளும் பொருளும் விரிவக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

13:ஆத்திசூடி

13 :அஃகம் சுருக்கேல்.சொற்பொருள்:அஃகம்- தானியங்களை:சுருக்கேல்- அளவில் குறைத்து விற்காதே.கருத்து தாணியங்கள் முதலிய பண்டங்களை அளவில் குறைத்து வியாபாரம் செய்யாக் கூடாது.விரிவாக்கம்: வர்த்தகர்கள் விலைக்கு ஏற்ற நிறை நிறைந்த பொருட்களையே மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும் நிறை அளவில் குறைத்து கூடிய லாபத்திக்குகாக மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்யக்கூடாது என எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள்.தினமும் ஒரு திருஞானக்குறளும்.பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

12:ஆத்திசூடி

12 :ஔவியம் பேசேல்.சொற்பொருள்: ஔவியம்-பொறாமை: பேசேல் பேசாதே கருத்து பொறமை கொண்டு பேசுவது கூடாது. விரிவாக்கம்: மனிதர்களிடம் உள்ள உயர்நிலை கண்டு பொறாமை கொள்ளக்கூடாது அப்படி பொறாமை கொள்வதால் தன் நிலை வளர்ச்சியையும் உயர்நிலைக்கு செல்ல இருக்கும் வழிகளையும் தடுக்கும் அத்துடன் பல தீமைகளையும் விளைவிக்கும் என எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள் தினமும் ஒரு  திருஞானக்குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

11:ஆத்திசூடி

11:ஓதுவது ஒழியேல் சொற்பொருள் ஓதுவது கற்பது: ஒழியேல் விட்டு விடாதே.கருத்து. எக்காரணமாயினும் படிப்பதை விடலாகாது. விரிவாக்கம் : கற்றுக்கொண்டு இருப்பதே வாழ்வியல் சிறப்பு கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பிருக்கும் அதனால் கல்வியையும் வாழ்க்கையையும் கற்றுக்கொண்ட இருப்பது வாழ்கைக்கு சிறப்பாகும் அதனால் கற்பதை கைவிடல் ஆகாது என எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள் தினமும் ஒரு ஞானக்குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் . 

10:ஆத்திசூடி

10 :ஒப்புரவு ஒழுகு. சொற்பொருள்:ஒப்புரவு,உலகத்தின் போக்கு அறிவது. ஒழுகு- அதன் படி நட. கருத்து: உலகத்தின் போக்கு எப்படி என அறிந்து அதன் படி நடந்து கொள்ள வேண்டும்.விரிவாக்கம்,இந்த உலகம் எப்படி வாழ்கின்றதோ எவற்றையேல்லாம் கடைப்பிடித்து வாழ்கின்றதோ அதன் வழியில் சென்று வாழ்ந்தால்தான் இந்த உலகம் மதிக்கும் அதுவே வாழ்வில் சிறப்பு என எடுத்துரைக்கின்றது ஓவையாரின் திரு ஞானக்குறள் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

09:ஆத்திசூடி

09: ஐயம் இட்டு உண் யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும். ஐயம் இட்டு உண் :சொற்பொருள்: ஐயம்உணவு உணவில்லாதோரின் ஐயம் வேறு பிச்சை வேறு;உணவில்லாதோர்க்கு வழங்குவது ஐயம்:பிச்சை எடுப்போருக்கு நாம் இடுவது பிச்சை:காண்க ஆண்டாள் திருப்பாவை - ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிபாடல் கருத்து:உணவு தேவைப் படுவோர் யாராவது இருப்பின் அவருக்கு உணவிட்ட பின் உண்ணுதல் வேண்டும்.

08:ஆத்திசூடி

08: ஏற்பது இகழ்ச்சி.சொற்பொருள்.ஏற்பது-ஒருவரிடம் சென்று இரப்பது(இல்லை எனக் கேட்பது); இகழ்ச்சி இழிவைத் தருவது.கருத்து:யாசிப்பது இழிவு தரும் செயலாகும். விரிவாக்கம் : உழைத்து வாழாது பிச்சை எடுத்து வாழ்வது வாழ்வுக்கு அவமரியாதையை  தரும் என எடுத்துரைக்கின்றது திரு ஞானக்குறள்.எழுதுகோல் முனையில்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும்.

7:ஆத்திசூடி

7:எண் எழுத்து இகழேல்.சொற்பொருள்எண்:விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும்:எழுத்து இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும்:இகழேல்- அலட்சியம் செய்யாதே எண் எழுத்து இகழேல் கணித இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல்நன்கு கற்க வேண்டும்.

6:ஆத்திசூடி

6:ஊக்கமது கைவிடேல் சொற்பொருள்:ஊக்க்கம் அதை உற்சாகத்தை: கைவிடேல் இழந்து விடாதே: கருத்து ஒரு செயலைச் செய்யும் போது தடை ஏற்படுமாயினும்,அது கண்டு உற்சாகம் குன்றிவிடக் கூடாது.விவாக்கம் எதில் முயற்சிகள் மேற்கொண்டலும் அதில் சிறந்த பயனை அடையும் வரை படிப்படியாக முன்னேறி செல்லவேண்டுமென திரு ஞானக்குறள் எடுத்துரைக்கின்றது தினமும் ஒரு திருஞானக்குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும்.

5:ஆத்திசூடி

5: உடையது விளம்பேல்.சொற்பொருள் உடையது உன்னிடம் உள்ள திறமைகளை விளம்பேல்- ஊர்அறியச் சொல்லாதெ.கருத்து நமது திறமைகளை வெளியே சொல்லக்கூடாது.விரிவாக்கம் மக்களிடம் இருக்கும் புத்திசாலி தன்மைகளை அல்லது திறமைகளை யுக்திகளையும் உலகறிய சொல்லாதீர்கள் என எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள் ஞானக்குறளும்.பொருளும் விரிவாக்கமும் பாலசுப்பிரமணியம் .

4:ஆத்திசூடி

4:ஈவது விலக்கேல் சொற்பொருள் ஈவது கொடுப்பதை:விலக்கேல் தடை செய்யாதே:கருத்து பிறருக்குக் கொடுப்பதைத் தடுக்கக் கூடாது.விரிவாக்கம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து  உதவிக்கொள்வதை மற்றொருவர் தடுப்பதை தவிர்த்துகொள்வது சிறந்த வாழ்வியல் சிந்தனையென எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள் பாலாஜீ பாலசுப்பிரமணியம். வீழ்வது நாம் ஆனும் வாழ்வது தமிழாகட்டும் .

3:ஆத்திசூடி

3:இயல்வது கரவேல். உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.சொற்பொருள்இயல்வது உன்னால் செய்ய முடிவதை;கரவேல்.செய்யாமல் மறைத்து வைக்காதே.கருத்து நம்மால் முடிந்ததை மறைக்காமல் செய்ய வேண்டும். மக்களுக்கு மக்கள் உதவிக்கொள்ளவது இயல்வது இயலுமானவற்றை கொடுத்து உதவுதல்.தினம் ஒரு திருஞானக்குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .வீழ்வது நாம் ஆயினும் இந்த உலகில் வாழ்வது தமிழாகட்டும் . 

ஆத்திசூடி

2:ஆறுவது சினம் கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.சினத்தை ஆறப்போடவேண்டும்  உங்களுக்கு பிடிக்காதவர்கள் உங்கள் முன் தோன்றினால் உங்களுக்கு கோபம்வந்தால் கோபத்தை ஆறப்போட இடத்தை மாற்றுவது சிறந்த வழி சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல்,காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது.மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியக்கூடும் சினத்தால் இனம் மொழி கலாச்சாரம் ஏன் ஒரு நாடே அழிந்து போகலாம் அதனால் சினம் தாழ்துதல் நன்றென்று எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள்.தினமும் ஒரு திருஞானக்குறளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் உயர்வது தமிழாகட்டும் .

ஆத்திசூடி

1:அறம் செய்ய விரும்ப.அறம் செய்ய விரும்புங்கள் நீங்கள் தருமத்தையும் உங்கள் கடமையையும்  செய்ய ஆவல் கொள்ளுங்கள் செல்வந்தர்கள்தான் தர்மம் செய்யலாம் என்று இல்லை ஏழைகளும் அறம் செய்யலாம் பணம் பொருள் கொடுப்பதுதான் அறம் என்பதில்லை கல்வியை புகட்லாம் தமிழை வளர்க்கலாம் சொல்லாலும் செயலாலும் மனதாலும் உதவுவதும் அறம்தான் மனிதர்கள் வாழ்வில் நல்லவற்றை செய்தால் அதுவே சிறந்த அறமாகும் அதனால் சிறந்த சமுகம் உருவாகும் என்பது பொருள்.தினமும் ஒரு ஞானக்குறளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் தழைப்பது தமிழாகட்டும்.

14/140:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லால் அறிவிலாதார் . உலகத்தோர் கருத்துக்கு ஒப்ப ஒழுங்கு முறையறியாதவர்கள் கல்வி பல கற்றும் அறிவற்றோர் எனப்படுவர்.உலகத்தில் படித்து பல நூல்களில் தெளித்வர்களானலும் முதியோர்களில் சொல்கேட்டு வாழ்க்கை நடத்ததவர்கள் படித்திருந்தும் படிக்காதவரே என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

14/139:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

ஒழுக்க முடையவரக்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் . ஒழுக்கமுடையவர் தீய வார்த்தைகளை தவறியும் தம் வாயால் கூறுதல் இயலாது.நல்ல பழக்கமுடையது மக்களால் என்றுமே தப்பி தவறியும் கூடாத வார்த்தைகள தங்கள் வாய்மொழியால் உச்சரிக்க மாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

14/138:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.நல்லொழுக்கம் என்றும் நல்லின்பம் தரும் தீயொழுக்கம் எப்பிறவியிலும் துன்பத்தைக் கொடுக்கும்.மனித வாழ்வில் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தின் வாழ்க்கை என்றும் நன்மையே தரும் அதே தீயசெயல்களைச் செய்தால் எப்பிறவியிலும் துன்பம் வந்து சேரும் தீமையை விலக்கி நல்லொழுக்கத்துடன் வாழ்வதே வாழ்விற்கு சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

14/137:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி. ஒழுக்கமைடையவர் மேன்மை அடைவார் அதில் தவறுபவர் அடையக்கூடாத பெரும் பழி அடைவர்.நல்ல நேர்முடன் வாழ்பவர்கள் சிறந்த நிலையை அடைவார்கள் நேர்மையில்லாமல் வாழ நினைக்கும் மனிதர்கள் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

14/136:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து . அறிவுடையோர்  சிறிதும் ஒழுக்கம் தவறாமல் செய்யும் கடமை எவ்வளவு கடினமாக இருப்பினும் செவ்வனே செய்து முடிப்பர் தவறினால் துன்பம் வரும் என அறிந்து.அறிவுள்ள மனிதர்கள் கொஞ்சமும் பிழையில்லாமல் எப்படியாகப்பட்ட கடினமான காரியத்தையும் சரிவரச்செய்து முடித்து விடுவார்கள் இல்லாவிட்டால் பல பிரச்சினைகள் வாழ்வினில் வந்து சேருமேன்றே முன்கூட்டியே அறிந்திருப்பதனால் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

14/135:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

அழுக்காறுடையான் கண் ஆக்கம் போன்று இல்லை ஒழுக்கமில்லான் கண் உயர்வு.பொறாமை உள்ளவனிடம் செல்வம் நில்லாது நீங்கிவிடும் அவ்வாறே ஒழுக்கமற்றவனிடம் உயர்வு நீங்கிவிடும்.பொறாமை உள்ளவர்களிடம் பணம் நிக்காது நீங்கிவிடும் அதேபோல் சிறந்த மனித நல்நடத்தையில்லாதவர்களின் வாழ்வுதனில் உயர்வான நிலை இல்லாமல் போய்விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு