77/763:திருக்குறள்-படைமாட்சி
திருக்குறள்: ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை? நாகம் உயிர்ப்பக் கெடும். ( குறள் 763 - அதிகாரம் : படைமாட்சி ) பொருள்: கடல் போன்ற பெரிய எலிகள் ஒன்று சேர்ந்து கத்தினாலும் அதனால் என்ன பயன்? பாம்பானது தன் மூச்சுக் காற்றை வெளிவிட்டாலே அந்த எலிகள் அழியும் தன்மையை அடைந்துவிடும். விரிவாக்கம்: எண்ணிக்கையில் எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும், வலிமை அற்றவர்கள் கூடி ஆரவாரம் செய்வதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது. சிறிய பாம்பின் மூச்சுக் காற்றுக்கே மிரண்டு ஓடி அழியும் எலிகளைப் போல, தரம் குறைந்த கோடிக்கணக்கான பகைவர்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டாலும், வீரம் செறிந்த வலிமையான ஒரு தலைவனது அல்லது படையின் சிறு தாக்குதலின் முன்பாக அவர்கள் தின்று நிலைக்க முடியாமல் ஓடிப் போவர் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார். English Translation: Thirukkural: Olithakkaal Ennaam Uvari Elippakai? Naagam Uyirppak Kedum. Meaning: What matters if a multitude of hostile rats make a loud noise like the ocean? They perish the moment a cobra breathes upon them. Explanation: Valluvar illustrates that a vast host...