Posts

Showing posts from June 28, 2019

64/640:திருக்குறள்-அமைச்சு

Image
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅதவர் . முறையாக ஆலோசித்தும் செய்யும்போதும் அதனை முடியும்படி செய்யமாட்டார்  செய்யும் திறமையற்ற அமைச்சன். எப்படி திட்டங்களை போட்டு கொடுத்தாலும் செயல் திறன் இல்லாதவர்களிடம் போய் சேர்ந்தால் செயல்படமலேதான் போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

64/639:அமைச்சு திருக்குறள்

Image
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்  எழுபது கோடி உறும்.உடனிருந்து கேடு செய்யும் அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் நல்லவர்.கூடவே இருந்து கொண்டு சிறப்பான முடிவுகளை எடுக்காது தோல்விகளையே தழுவும்  அமைச்சரை விட எழுபது கோடி பகைவர்களே நல்லவர்கள் எனலாம் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

64/638:அமைச்சு :திருக்குறள்

Image
அறிகொன்று அறியான் எனினும் உறுதி  உழைப்பிருந்தான் கூறல் கடன். அறிந்து கூறும் அறிவை மறுத்தும் தனக்கும் அறிந்திருக்கும் மன்னனுக்கு நல்லவை கூற வேண்டும் அமைச்சன். அறிந்து கூறிய அறிவை அறியாமலும் தானாகவே புரிந்து கொள்ளாமலும் அரசாள்பவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் அமைச்சனே எடுத்துரைக்க வேண்டுமென  எடுத்துரைக்கின்திறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

64/637:திருக்குறள்- அமைச்சு

Image
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.நூல் சொல்லும் முறைகளை அறிந்திருப்பினும் உலக இயல்பையும் அறிந்து அதன்படி செய்யவேண்டும்.பாடப்புத்தகங்களை  எவ்வளவு படித்திருந்தாலும் உலகத்தின் அறிவை வளர்த்து கொள்ளுதலும் அதன் படி வாழ்வை நாடத்தமுற்ப்படுவதுமே மனித வாழ்வுக்கு சிறப்புதருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

64/636:அமைச்சு திருக்குறள்

Image
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு  அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை. நுண் அறிவும் நூலறிவும் அறிந்தவர்க்கு தீர்க்க முடியாத சிக்கல் இல்லை.சிறந்த பொதுத்திறனும்  கல்வியறிவு உள்ளவர்களுக்கு தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லையென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

64/635:திருக்குறள்-அமைச்சு

Image
அறனறிந்து  ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறன்றிந்தான் தேர்ச்சித்துணை. அறங்களை அறிந்து அறிவார்ந்த சொற்களை கூறும் திறமும் எப்பொழுதும் செயலாற்றும் திறமும் உடையவன் அமைச்சனாவன்.அறநெறிகளில் சிறந்தவர்களாகவும்அறிவுமிக்க சிந்தனையாளராகவும் எப்பொழுதும் செயலாற்றும் தன்மை கொண்டவராகவும் சொற்திறனுடையவராகவும் வாழ்வை மேற்கொள்ளும் ஒரு மனித்தனே அமைச்சாரக முடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

64/634: அமைச்சு திருக்குறள்

Image
தெரிதலும்  தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லும் வல்லது அமைச்சு.செயல் பற்றி ஆராய்தல் ஆராய்ந்தபின் செயல் புரிதல் அறிந்தவற்றை உறுதியாகச் சொல்லுதல் இவற்றில் சிறந்தவன் அமைச்சன்.மனித வாழ்வில் எதையும் ஆராய்ந்து செயல்படுவது நன்று எதை ஆராய்சி செய்து சிறப்பு பெறுகின்றோமோ அதை தக்கதருணத்தில் சரியான இடத்தில் உறுதியாக செயல்புரிந்து நல்லவற்றை நாட்டுக்காக எடுத்துரைக்கும்  அமைச்சே உலகில் சிறந்த  அமைச்சு.என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

64/633:திருக்குறள் -அமைச்சு

Image
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு.பகைவரைப்  பிரித்தல் நல்ல நண்பரை சேர்த்தல் பிரிந்த நல் நண்பரை மீண்டும் சேர்த்தல் இவற்றில் வல்லவனே அமைச்சன்.ஒரு நாடு நல்லாயிருக்கவேண்டுமனால் ஒரு நல்ல அமைச்சு நாட்டுக்கு தேவை நாட்டின் பகைவர்களை வெளியேற்றி அதே நேரத்தில் மிகசிறந்த நண்பர்களை சேர்த்தல் முதலில் பிரிந்துபோனவர்கள் தங்கள் குற்றச்செயல்களை புரிந்து கொண்டு மனம் திருந்தி வந்தால் மீளவும் சேர்த்துக்கொள்ளுதல் என்பதே மிகசிறந்த அமைச்சுக்கான அமைச்சியல் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும்   ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

64/632:திருக்குறள்- அமைச்சு

Image
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.அஞ்சாமை நற்குடிப்பிறப்பு நாட்டைக்காத்தல் நூலறிவு முயற்சியுடமை இவ்வைந்தும் உடையவனே அமைச்சன். துணிவுடன் செயல்படுவது சிறந்த குடிகளாக விளங்குவது சிறந்த வகையில் நாட்டை காத்துக்கொள்ளுதல் சிறப்பான கல்வியையும் பேணிப்பாதுகாத்தல்   நாட்டைமுன்னேற்றும் முயற்சியுடன் செயல்படுவதே அமைச்சு ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

64/631:திருக்குறள்-அமைச்சு

Image
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.தொழில் செய்யும் கருவி ஏற்ற காலம் செய்யும் தன்மை செயல்படும் செயல் இந்தநான்கும் ஆராய வல்லவனே அமைச்சன்.சிறந்த காலம் தேவையான ஆயுதங்கள் செயல்திறமைகள் படைநாடத்தும் சிறப்பு அனைத்தையும் புரிந்து கொண்டு அமைச்சு பதவியில் இருப்பவனே சிறந்த அமைச்சாரக கருதமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.