Posts

Showing posts from September 14, 2018

14/134:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

மறப்பினும்ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்.கற்பவன் மறந்தாலும் கற்றுக் கொள்ளமுடியும் ஒழுக்கத்தில் குறைவடைதால் அவனது குடியின் சிறப்பு அழிந்துவிடும் . படித்தவர்கள் மறந்தாலும் படித்து கொள்ள முடியும் நேர்மையிலும் ஒழுக்கமான வாழ்வும் இல்லாவிட்டால் அவர்களின் குடும்ப சிறப்பே அழிந்து விடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

14/133:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ஒழுக்கமுடைமை குடிச்சிறப்பாகும் ஒழுக்கத்தில் தவறினால் தாழ்ந்த குலத்தனாவனாய் ஆக்கிவிடும்.நேர்மை என்னும் ஒழுக்கம் குடும்ப சிறப்பாகும் வாழ்வினில் அது குறைத்தால் உயர்ந்த குடும்பத்தவர்களையும் தாழ்ந்த குடுப்பத்தவர்களாக்கி விடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

14/132:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்ததோம்பித் தேரினும் அஃதே துணை.துன்பத்திலும்  ஒழுக்கம் காக்ககப்படவேண்டும் ஏனெனில் எவ்வளவு ஆராய்ந்து நோக்கினும் ஒழுக்கமே சிறந்த துணையாக நிற்கின்றது.வாழ்வில் என்ன கஸ்ட துன்பங்கள் வாழ்ந்தாலும் நேர்மை என்னும் ஒழுக்கமான வாழ்வியலை கடைப்பிடித்தல் அவசியம் சமுதாயத்தில் எப்படி சிந்தித்து பார்த்தாலும் நேர்மைக்கே தனிச்சிறப்பு உண்டு என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

14/131.திருக்குறள்-ஒழுக்கமுடைமை

Image
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கமானது பெரும் சிறப்பை அளிப்பதால்  அதனை உயிரைவிடச் சிறந்தாக காக்கப்படவேண்டும்.மனிதர்களின் வாழ்நாட்களில் மனித ஒழுக்கம் மனித உயிர்களை விட மேலாக மதிக்கப்படுவாதால் ஒவ்வொரு மானிடப்பிறவியும் பண்பான ஒழுக்கமுள்ள வாழ்வு முறைகளை பின்பற்றி வாழ்வதே மானிடவாழ்வுக்கு சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

13/130:திருக்குறள்-அடக்கமுடைமை

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.மனதில் சினம் ஏற்படாமல் காத்து அடக்கத்துடனிருப்பவனிடம் அறக்கடவுள் சென்றடையும் சமத்தை எதிர்நோக்கியிருக்கும்.வாழ்க்கையில் கோபம் வராமல் மனதையும் மூளையையும் அடக்கி ஓர் நிலைப்படுத்தி சினம்கொள்ளாமல் இருக்கவேண்டும் கற்கவேண்டியவையை கற்று அதில் தேர்ச்சி பெற்று வாழ்பவர்களை சமுகம் அடைவதற்கு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சரியான நேரம் வந்ததும் அவர்கள் வாழ்வில் அறம் நுழைந்து காத்து நிற்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

13/129:திருக்குறள்-அடக்கமுடைமை

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு.தீச்சுட்டப் புண்ணினால் உடலில் ஏற்படும் வடு மனதில் ஆறும்,ஆனால் தீயச்சொற்களினால் ஏற்படும் புண் மனதில் என்றும் நிலைத்திருக்கும் மானிட வாழ்வில் காயங்கள் வருவதுண்டு அந்த காயங்கள் மனித உடம்பில் ஏற்படுத்த பட்டால் அந்த அடையாளங்கள் எப்போது ஆவது ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் மானிடர்களின் நாவினால் சுடுகின்ற தீயச்சொற்கள் என்றும் அவர்கள் மனதில் தீயாய் எரிந்து கொண்டிருக்கும்.அதனால்தான் வார்த்தைகளை என்றும் கவனமாக பாவிக்கவேண்டும் என்பதே கருத்தாக்கம் பேசிவிட்ட வார்த்தைகளை மீண்டும் திருப்பி பெறமுடியாது ஏன் என்றால் பேச்சுவாக்கியவர்களின் மனம் புண்பட்டு விட்டகாரணத்தால் அவர்கள் என்றும் மன்னிக்கபோவதில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதாணி முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

13/128:திருக்குறள்-அடக்கமுடைமை

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகாதி விடும் . தீய சொற்களினால் விளையும் தீமையானது ஒருவரிடமிருக்கும் அனைத்து நலன்களையும் கெடுதலாக்கி விடும்.கெட்ட சொற்களை மனிதர்கள் பாவிப்பதால் அவர்களிடமிருக்கும் நல்ல விடயங்களையும் சிறப்பு பண்புகளையும் கெடுத்து விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

13/127:திருக்குறள்-அடக்கமுடைமை

 யாகாவா ராயனும் நாகாக்க பாங்காக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.எவற்றை அடக்காவிட்டாலும் நாவை அடக்கவேண்டும்.இல்லையேல் தவறான சொற்களை கூறி அவமானப்பட நேரிடும்.மனிதர்களின் வாழ்வில் வார்த்தைகளை கவனமாக பவிக்கவேண்டும் என்பது மொழிபேச்சு வளமை.எப்பவும் நாவை அடக்கி பேசவேண்டும் உண்மையாக பேசவேண்டும் நல்லவார்த்தைகளை தினசரி பேசவேண்டும்.நாவில் இருந்து வெளியாகும் வாக்குறுதிகள் செயல்படவேண்டும் என்பதே மனித வாழ்வின் உன்னதமான கருத்துகள்.பேச முன் வார்தைகளை அளந்து நாவடக்கிய சொற்களை கொண்டு எமக்கு தீமைதாரதபடி அவமானப்படதாபடி நடந்து கொள்வது வாழ்க்கைக்கு சிறந்தது என எடுத்துரைக்கின்றது  திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

13/126:திருக்குறள்-அடக்கமுடைமை

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடங்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து.ஆமை தன் உறுப்புகளை ஓட்டினுள் அடக்கி வாழ்தல்போல் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வது ஏழு பிறப்பிலும் தீமையின்றிகாக்கும்.வாழ்வில் மனிதர்கள் தங்களின் ஐம்புலன்களையும் ஆமையைபோல் அடக்கி வாழ்ந்தால் ஏழு பிறப்பிலும் துன்பம் வந்து சேராது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

13/125:திருக்குறள்-அடக்கமுடைமை

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந்தகைத்து.பணிவுடைமை எல்லோர்க்கும் வேண்டும் செல்வார்க்கும் இருப்பது மற்றொரு சிறப்புடைய செல்வமாகும் . பெருமை இல்லாமல் பணிவுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு இருப்பது இன்னுமொரு சிறந்த செல்வமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

13/124:திருக்குறள்-அடக்கமுடைமை

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிய.நல்லறத்தில் தவறாது முறையாக அடங்கி  வாழ்பவன் பெருமை மலையைவிட பெரிதாக கருதப்படும்.ஒழுங்குகள் தவறாமல் வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்களின் சிறந்த செயல்கள் உலகில் பெருமைகுரியது அச்செயல்களை மிக உயர்ந்த இடத்தில வைத்து மதிக்கப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

13/123:திருக்குறள்-அடக்கமுடைமை

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடக்கப்பெறின்.அறிய வேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கம் போற்றப்பட்டு மதிப்பு தரும்.அறியவேண்டிய விடயங்களை அறிந்து கொள்ளவேண்டும் அதற்கு ஏற்றப்போல் அமைதியான முறையில் நடந்துகொண்டால் அந்த செயல் பாராட்டப்பட்டு  சிறந்த மரியாதையை தரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

13/122:திருக்குறள்-அடக்கமுடைமை

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு அடக்கம் என்ற குணத்தை சிறந்த பொருளாக காக்கவேண்டும் அவ்வடக்கத்தை விட சிறந்த செல்வம் உயிர்க்கில்லை.மனித வாழ்க்கையை அடக்கி வாழ்வதென்பது வாழ்வுக்கான சிறப்பு  பாசம் சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருக்கவேண்டுமெனில் அடக்கமெனும் குணத்தை கொண்டிருப்பது சிறந்த வாழ்க்கைக்கு சிறப்பான பொருளாடக்கமாக காப்பதை விட சிறந்த செல்வம் இந்த உலகத்தில் வேறேதுமில்லை என எடுத்துரைக்கிறது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

13/121:திருக்குறள்-அடக்கமுடைமை

அடக்கம் அமர்ருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்க குணம் ஒருவரை தேவரிடத்தே அழைத்து செல்லும் அடங்காமை நரகத்தில் தள்ளிவிடும்.வாழ்க்கையில் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தால் தேவலோகத்தில் வாழலாம் வாழ்க்கை நெறிகளுக்குள் அடங்கி வாழவிட்டால் நரகம்லோகம்தான் செல்லவேண்டிவரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

12/120:திருக்குறள்-நடுவு நிலைமை

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம்போற் செயின் வாணிபம் செய்பவர் பிறர்பொருளை தன் பொருளாக மதித்தால் வாணிபம் வளரும்.வியாபாரம் செய்பவர்கள் மற்றவர்களுடைய விற்பனைக்காக வரும் பொருட்களையும் கவனமாக பாதுகாத்து தங்கள் பொருட்களாக நினைத்து வியாபாரம் செய்துவந்தால் உலகில் வியாபாரம் பெருகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

12/119:திருக்குறள்-நடுவு நிலைமை

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாக  உட்கோட்டம் இன்மை பெறின்.ஒருவன் உள்ளம் நடுவுநிலைமையில்  இருக்குமானல் அவன் சொல்லில் குற்றமிருக்காது என்பது நடுவு நிலைமை.மனிதகுலத்தின் வாழ்கையில் நடுநிலையான வாழ்வு வாழ்வாதே வாழ்கைக்கு சிறப்பு மக்களிடத்தில் வருகின்ற சொற்களை வைத்து  அவர்கள் உள்ளத்தில் நடுநிலமைதன்மையை அறிந்து கொள்ளமுடியும் அப்படி நடுநிலை இருக்குமாயின் மக்களின் சொல்லில் குற்றமிருக்காது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் .எழுத்தாணி முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம் .

12/118:திருக்குறள்-நடுவு நிலைமை

Image
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.சமமாக நின்ற பின் தன்பால் வைக்கப்படும் பொருளின் அளவைக் காட்டும் துலாக்கோல் போல் நடுவுநிலமை மாறதிருத்தல் அறிவுடையோர்க்கு அழகு.பொருட்கள் நிறுக்கும் தாராசின் அளவுகோல் முள்ளைப்போல் நடுநிலையாக சமுகத்தில் என்றும் மாறாது வாழ்க்கையை நடாத்துவதுதான் புத்திசாலிகளாவார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

12/117:திருக்குறள்-நடுவு நிலைமை

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு தனது மனமறிந்து முறை தவறி கேடுசெய்தால் அதனால் நாம் கெடுவோம் என்று ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.உலகத்தின் மனித வாழ்வுதனில் ஒவ்வொருமனிதர்களும் மனமறிந்து முறைதவறி தீமைகளை செய்யாது இருத்தல்வேண்டும்.நாம் செய்கின்ற தீமைகளால் நாம் கெடுவோம் என்று சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் உணர்த்தே வாழ்க்கை நடத்தவேண்டும் நாம் செய்கின்ற தீமைகளால் ஒரு சமுதாயமே அழித்துபோகக்கூடும் என்ற எண்ணம் மனதில் தோன்றவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

12/116:திருக்குறள்-நடுவு நிலைமை

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். நடுவுநிலமை மாறாத அறநெறியில் வாழ்பவர் மற்றவரின் வறுமை நிலைக்கண்டு இழிவாக கருதமாட்டார்கள்.நடுநிலைமையாக சமூகத்தில் வாழும் மனிதர்கள் பிறரின் கஸ்டநிலையை பார்த்து கீழ்த்தனமாக நினைக்க மாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

12/115:திருக்குறள்-நடுவு நிலைமை

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.நன்மையும் கேடு விளைதலும் எல்லோர்கும் உண்டாவதே எனவே அவைகளை வைத்து மற்றவர் நிலை எண்ணாதிருப்பது சான்றோர்கு அழகு உலகத்தின் வாழ்வுதனில் மனிதர்கள் வாழ்ந்து கெட்டு அழிந்து போவதுண்டு அதனால் மனிதர்களின் வாழ்க்கையில் வருகின்ற நன்மையையும் கேடு விளைத்தால் அது எல்லோருக்கும் உண்டாக கூடும் என்றே நாம் மனதில் கொள்ளவேண்டும்  எனவே அவைகளை வைத்து மற்றவர்களின் வாழ்க்கை நிலையை மனதில் கொள்ளாதிருப்பது உலக மக்களுக்கு அழகு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

12/114:திருக்குறள்-நடுவு நிலைமை

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்.ஒருவர் நடுவுநிலமை உடையவரா அல்லாதவரா என்பது அவர்களுடைய மக்களினால் அறிந்து கொள்ள முடியும்.மனிதர்களின் வாழ்வினில் நடுநிலை உள்ளவர்களாக அல்லது நடுநிலை இல்லாதவர்களா என்பதெல்லாம் அவர் அவர் பேச்சில் தெரியவரும் அவரின் வாழ்க்கைக்கு பின்பு மிஞ்சி நிற்கும் புகழ்சியாலும் இகழ்ச்சியாலும் அவர்களின் பிள்ளைகளாலும் அறியமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

12/113:திருக்குறள்-நடுவு நிலைமை

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். நன்மையே தரக்கூடியதாக இருந்தாலும் முறை தவறிக்கிடைக்கும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விட வேண்டும்.வாழ்க்கைக்கு சிறந்த விடயங்களை தரக்கூடிய செல்வமாக இருந்தாலும் உழைத்து பெறாத செல்வம் என்றும் சிறந்த செல்வமாகாது நேர்வழி உழைப்பின்றி தவறான வழிகளில் வரக்கூடிய செல்வத்தை அந்த நேரமே மறப்பது நன்று என்று எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

12/112:திருக்குறள்-நடுவு நிலைமை

Image
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.நடுவு நிலைமயிலுள்ள ஒருவனது செல்வம் அழியாது.அவன்வழித் தோன்றுபவர்க்கும் நன்மை தரும்.மனிதர்களின் வாழ்க்கைதனில் நடுநிலைமை வாழ்கையை வாழ்ந்தால் வாழ்நாட்களில் உழைத்து சேர்கின்ற செல்வங்கள் அழியாமல் அவர்கள் இடத்திலேயே இருக்கும் அவர்களின் வழியை பின் பற்றுவோர்க்கு வாழ்வில் நன்மையே நடக்கும் என எடுத்துரைக்கின்றது  திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்ரமணியம் டென்மார்க்.

12/111:திருக்குறள்-நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பொறின் நண்பர்கள்,பகைவர்,அயலார் மூவரிடத்தும் நீதி கூற வேண்டிய தாயின்,நடுவு நிலைமை எனும் வழியே சிறந்த அறமாம்.உற்றார் உறவினர்கள் சுற்றத்தார் நண்பர்கள் எதிரிகள் இவர்களிடத்தில் நடுநிலைமை எனும் வழியை கடைப்பிடிப்பதே சிறந்த வாழ்க்கை நெறியாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்ரமணியம்.