Posts

Showing posts from October 21, 2018

34/336:திருக்குறள்-நிலையாமை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.நேற்று உயிருடனிருந்தான் இன்று இறந்து விட்டான் என்பதே இவ்வுலகின் இயல்பு.பிறந்து வளர்த்து இந்த பூமியில் மனிதர்கள் நேற்று வரை பல இன்ப துன்பங்களுடன் வாழ்ந்தார்கள் இன்று இறந்து போனார்கள் என்பதே மனித வாழ்க்கையின் வரலாறு அத்தகைய பெருமையை கொண்டதே இந்த பிரபஞ்சம் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

34/335:திருக்குறள்-நிலையாமை

நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும்.நாவடைத்து விக்கல் வருமுன் அறத்தை விரைந்து செய்யவேண்டும்.உடல் நலமின்றி படுக்கையில் கிடந்து நாக்கை அடைத்து கொண்டு விக்கல் வந்து இறக்கும் நிலைக்கு வரமுன் இருக்கும் செல்வங்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து அறசெயலை புரிந்து புண்ணியத்தை தேடிக்கொள்வதே சிறந்த அறவாழ்வின் பயனாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

34/334:திருக்குறள்-நிலையாமை

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.காலம் என்பது நாளன்று அது உயிரறுக்கும் வாள் என அறிவார் காலத்தின் தன்மையறிந்தார்.மனிதர்களின் வாழ்வில் வாழ்க்கையின் காலம் என்பது ஒவ்வொரு வினாடியும்  அவசியமானது அதை அறிந்த மனிதர்கள் வாழ்கின்ற வாழ்வை நெறிப்பட வாழ்ந்து  ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வார்கள் அந்த நாட்கள் கடந்து செல்லும் போது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் இழந்து வருவதாக அறிஞர்கள் அறிந்துகொள்வார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

34/333:திருக்குறள்-நிலையாமை

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அதற்குப ஆங்கே செயல். செல்வம் நிலையற்றது அச்செல்வம் நிலைபெற அறவழிகளை மேற்கொள்ளவேண்டும்.நிலையற்றது பணம் பொருள் அவற்றை நிலைபெறச்செய்ய வாழ்வில் நிலையுள்ளவற்றை செய்து அறத்தின் வழி சென்றால் நிலையற்ற செல்வம் நிலையாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

34/331:திருக்குறள்-நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை. நிலையற்ற பொருட்களை நிலைக்கும் என்று கருதுபவனுடைய அற்ப அறிவு இழிவானது.மனிதர்களின் வாழ்வில் நிலையில்லா உடைமைகளை நிலையுள்ள உடமைகள் என கருதும் மனிதர்களின் மிகக்குறைவான  அறிவாகவும் இழிவானதாகவும் இந்த உலகில் கருதப்படும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.