Posts

Showing posts from December 23, 2019

88/880:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார். பகைவரின் அகந்தையை அழிக்க இயலாதவர் மூச்சு விடுமளவில்தான் வாழ்பவராவார் மற்றளவில் இறந்தவராவார்.எதிரியின் செருக்கை அடக்கமுடியாதவர்கள் மூச்சு விட்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களின் வாழ்வியலில் எதிரியை அடக்குமளவுக்கு திறமையில்லை என்பதே இவர்களை போன்ற மனிதர்கள் வாழ்வதும் இறப்பதும் ஒன்றேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/879:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைக்கொல்லும் காழ்த்த விடத்து. முள்ளுடைய மரத்தை முளைக்கையிலேயே அழிக்கவேண்டும் முதிர்ந்துவிட்டால் வெட்டுவோர் கையை வருத்தும்.கூரியமுள்தரும் மரங்களை முழைக்கமுன்பே அழித்துவிட வேண்டும் அது முழைத்து மரமானால் வேண்டும்போது கைகளில் குத்தும் அது வலியை உண்டுபண்ணுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/878:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
வகையறிந்து தற்செய்து தற்காப்பு மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.வெற்றியின் வகையறிந்து தன் வலிமையை உயர்த்திக் கொண்டால் பகைவர் கர்வம் அழிந்து விடும் .எப்படி வெற்றி கொள்ளலாமென அறிந்து கொண்டால் கையாளும் முறையை புரிந்து கொண்டு பலத்தையும் பெருக்கிகொண்டால் எதிரியின் எதிர்ப்பு சக்திகள் தானாகவே பலமிழந்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/877:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. தன் துன்பத்தை உணராத நண்பர்கு தன் நிலை கூறாத பகைவர் முன் தன் வலிமையின்மையைக்காட்டாதே.மித்திரர்கள் உங்களின் துன்ப துயரங்களை புரிந்து கொள்ளாதபோதும் எதிரிகள் உங்களை கவனிக்கும்போதும் எந்த நிலையிலும் உங்களின் இயலாமையை அவர்களின் முன் காட்டிக்கொள்ளாதீர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/876:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
தேறினும் தேறா விடினும் அழிவின் கண் தேறான் பகாஅன் விடல்.பகைவன் நிலை அறிந்திருப்பினும் அறியா திருப்பினும் துன்பநிலையில் அவனுடன் நட்பும் கொள்ளாதே பகைத்தும் கொள்ளாதே. எதிரிகளைபற்றி அறிந்திருந்தாலும் அறியாமல் இருந்தாலும் அவர்களுடன் நட்புறவு கொள்வதை தவிர்த்து கொள்வதே வாழ்வியலுக்கு சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/875:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
தன்துணை இன்றால் பகைஇரண்டால்தான் ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.துணையற்ற ஒருவன் தனக்குண்டான இரு பகைவருள் ஒரு பகைவனை நல்லத் துணையாகக் கொள்ளவேண்டும். துணையில்லாத மனிதர்கள் தங்களுக்குள்ளே இரண்டு எதிராளிகள் எதிர்கொண்டால் ஒரு எதிரியையாவது தோழமையாக்கிக்கொள்வதே சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/874:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
பகை நட்பாக கொண்டொழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. பகைவரையும் நண்பராகக் கருதும் நற்பண்புடையவனின் பெருமையில் உலகம் உள்ளது.எதிரிகளையும் மித்திரர்களாக எண்ணி நல்ல பண்பினை காட்டும் சிறந்த மனிதர்களின் வாழ்வியலில் இயங்குது இந்த உலகம். எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/873:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன். துணை வலிமையில்லாமல் தனித்து பலரோடு பகை கொள்பவன் பித்தனை விட அறிவற்றவனாவான். உதவி எதுவுமின்றி தனியாக நின்று உலகையே எதிர்ப்பவர்களை உலகத்தை அறியாதவர் என்று சொல்வதை விட அறிவே இல்லாதவர்களென்றே கூறவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

88/872:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
வில்லே உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே உழவர் பகை.வில் பயிற்சி வீரரைப் பகைத்துக்கொண்டாலும் சொற்பயிற்சி புலவரைப் பகைத்தல் கூடாது.ஆயுத பயிற்சியாளார்களை பகைத்துக்கொண்டாலும் சொற்பொழிவு புலவர்களை பகைத்தல் ஆகாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

88/871:திருக்குறள் பகைத்திறம் தெரிதல்

Image
பகை என்னும் பண்பிலனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. பகையென்னுந்தீமை குணத்தை விளையாட்டிலுங் கூட ஒருவன் விரும்பத்தக்கதன்று.எதிர்பு என்ற மனநிலை உடைய மனிதர்கள் விளையாட்டுக்கு கூட பகை உணர்வை வளர்த்துகொள்ள கூடாது அது எந்த மனிதர்களாலும் எற்கத்தக்தில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.