Posts

Showing posts with the label 115/1144:அலர் அறிவுறுத்தல் திருக்குறள்

115/1144:அலர் அறிவுறுத்தல்

Image
திருக்குறள்: கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை    இழந்து  பொருள்: ஊரார் தூற்றும் அலர்ச் சொல்லால் என் காதல் மேலும் பற்றுக் கோடு கொண்டு நிலைபெற்று வளர்கிறது; அந்த அலர்ச் சொல் மட்டும் இல்லையென்றால், இக்காதல் தன் சுவையை இழந்து சப்பென்று போயிருக்கும். விரிவாக்கம்: காதலிப்பவர்களைப் பற்றி ஊருக்குள் மக்கள் பேசிப் பேசியே அந்தப் பேச்சால் காதலை மேலும் பெருப்பித்து விடுகிறார்கள். ஊராரின் அலர்ச் சொற்கள் காதலர்களுக்குள் ஈர்ப்பையும் பிணைப்பையும் வளர்க்கும் பற்றுக் கோடாக அமைகின்றது. அத்தகைய ஊர்ப்பேச்சு மட்டும் இல்லாதிருந்தால், காதலின் கவர்ச்சியும் சுவையும் குறைந்து சிறப்பற்றுச் சப்பென்று ஆகியிருக்கும். ஊரார் தூற்றும் அலரே காதலை வளர்த்து இனிமையாக்குகின்றது என்பதை இக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது. English Translation: Thirukkural: Gauvaiyaal Gavvidhu Kaamam Adhu-intrael Thavvennum Thanmai Izhandhu. Meaning: My love thrives and takes firmer root because of the town's gossip; without this scandal, it would lose its luster and grow dull. Explanation: The maiden acknowledg...