63/630:திருக்குறள்-இடுக்கண் அழியாமை
திருக்குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின், ஆகும் தன் ஒன்னார் விழையும் சிறப்பு. ( குறள் 630 - அதிகாரம் : இடுக்கண் அழியாமை ) பொருள்: (தமக்கு வரும்) துன்பங்களை(ப் பெற்றால் என்ன, அவற்றைக் கண்டு தளராமல் அவற்றை வெற்றியின் படியாக ஏற்று) இன்பமாகக் கருதிக் கொள்வாரானால், அவருடைய பகத்துவர்களுமே விரும்பிப் போற்றத்தக்க உயர்ந்த சிறப்பினை அவர் அடைவார். விரிவாக்கம்: வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு மனம் தளர்ந்து முடங்கிப் போய்விடக் கூடாது. மாறாக, அத்தகைய இன்னல்களையும் ஒரு சவாலாக ஏற்று, அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எவன் ஒருவன் துன்பங்களை இன்பமாகக் கருதித் தன் இலக்கை நோக்கித் தளராது உழைக்கிறானோ, அவனுடைய திறமையைக் கண்டு அவனது கடுமையான எதிரிகள்கூட வியந்து பாராட்டி மதிக்கும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைவான். எத்தகைய இக்கட்டான சூழலிலும் மனஉறுதியை இழக்கக் கூடாது என்ற மாபெரும் வாழ்வியல் தத்துவத்தை வள்ளுவர் இக்குறளில் வழங்குகிறார். English Translation: Thirukkural: Innaamai Inbam Enakkolin, Aagum Than Onnaar Vizha...