84/836:பேதைமை திருக்குறள்
திருக்குறள்: பொய்படும் ஒன்றோ, புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். ( குறள் 836 - அதிகாரம் : பேதைமை ) பொருள்: செய்யும் முறையை அறியாத அறிவற்ற பேதை ஒருவன் ஒரு செயலைத் தன்மேல் ஏற்றுச் செய்தால், அந்தச் செயல் தவறிப் போவதுடன், அவன் சமுதாயத்தின் பழிப்புச்சொல்லாகிய அலங்காரத்தையும் அணிந்துகொள்ள நேரிடும். விரிவாக்கம்: ஒரு செயலைச் செய்வதற்கான தகுதியோ முறையோ அறியாத முட்டாள், தான் எதையோ சாதித்துவிடப்ப் போவதாக நினைத்து ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அந்தச் செயல் நிச்சயமாகத் தோல்வியில் முடியும். அதுமட்டுமின்றி, ஊராரின் கண்டனங்களையும் அவமானங்களையும் அவன் தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். English Translation: Thirukkural: Poipadum Ondro, Punaipoonum Kaiyariyaap Pedhai Vinaimer Kolin. Meaning: If an ignorant fool, who knows not how to do a thing, undertakes it, not only will the deed fail, but he will also wear the garland of public disgrace. Explanation: Valluvar highlights that when someone devoid of practical wisdom and c...