Posts

Showing posts with the label 118/1175:கண்விதுப்பழித்தல் திருக்குறள்

118/1175:கண்விதுப்பழித்தல்

Image
திருக்குறள்: படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.  பொருள்: கடலை விடப் பெரிய காதல் நோயை எனக்கு உண்டாக்கிய என் கண்கள், இன்று காதலனைக் காண முடியாமல் இம மூட முடியாது பெருந்துன்பத்தில் தவிக்கின்றன. விரிவாக்கம்: காதலனின் அழகைக் கண்டு, கடலை விடவும் பெரிதான காம ஆசையை எனக்குள் விதைத்தது என் கண்களே ஆகும். அன்று ஆசையோடு நோக்கிய அதே கண்கள், இன்று அவன் பிரிவால் துயில முடியாமல் இரவெல்லாம் விழித்திருந்துத் தவிக்கின்றன. பள்ளியறையில் படுத்துறங்க முடியாமல், தன் காதலனின் உருவத்தைத் தேடி அலைந்து வருந்துகின்றன. தனக்குக் கடலளவு துன்பத்தைத் தந்த கண்கள், இன்று தாமும் உறக்கமின்றித் தவிப்பதை இக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது. English Translation: Thirukkural: Padalaatraa Paidhal Uzhakkum Kadalaatraak Kaamanoai Seydaen Kan. Meaning: My eyes, which brought upon me a disease of love broader than the ocean, now cannot close in sleep and suffer deep distress. Explanation: The maiden blames her eyes for initiating her overwhelming emotional plight. By eagerly beholding her lover's charm, her ...