Posts

Showing posts from September 30, 2018

28/277:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற்கரியார் உடைத்து.குன்றிமணிப்போல் புறத்தே செவ்வுடையும் அதன் மூக்கு நுனிப் போல கருத்த மனமுள்ள மக்களை கொண்டுள்ளது உலகம்.மனிதர்களில் வெளிதோற்றத்தில் குண்டுமணின் சிவந்த நிறத்தை போல காட்சியளித்தாலும் இதயத்தால் குண்டுமணியின் மூக்கில் இருக்கும் கரும்புள்ளியை போல இதயத்தில் கருமையாண பக்கங்களை கொண்ட மனிதர்களும் இந்த உலகில் வாழ்கின்றார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

28/276:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.மனத்தால் ஆசைகளை விடாமல் ஆசைகளை விட்டவர் போல் ஏமாற்றி வாழ்பவனை போன்ற கொடியவர் எவருமிலர்.உள்ளத்தில் ஆசைகளை இல்லாது வெளியில் ஆசைகளை துறந்துவிட்ட மனிதர்கள் போல நடந்து கொள்ளவது தத்திரமான முறையில் வாழ்வை வாழுகின்ற மனிதர்களை போல இரக்கமற்ற மனிதர்கள் எவரும் இருக்கமுடியாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

28/275:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று  ஏதம் பலவுந்தரும்.மனதில் ஆசையில்லை என்றுச் சொல்லுபவரின் பொய் ஒழுக்கம் அச்சமயம் இனிதாக இருப்பினும்  பின்னர் பெரும் துன்பங்களைக் கொடுக்கும்.முற்றிலும் துறந்து விட்டோம் என்று காட்டிக்கொள்ள விரும்பும் மனிதர்களின் வாழ்வின் பொய்யொழுக்கம் எங்கள் வாழ்வினில் ஏன் இப்படி பொய்மையாக வாழ்தோம் என்று எண்ணி வாழ்வினில் வருத்தும்படி பலவகையான விருப்ப வேறுப்புகளையும் துன்பங்களையும் கொண்டு வந்து செர்க்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

28/274:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

தவமறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து வேட்டுவன்  புள்சிமிழ்த் தற்று.தவவேடமிட்டு தவறானவற்றைச் செய்தல் வேடுவன் புதரில் மறைந்து பறவையினை பிடிப்பது போன்றதாகும்.தவக்கோலம்பூண்டு கொண்டு தவத்தை செய்யாது குடும்ப வாழ்வில் ஈடுபடுவதும் தீய செயல்களை மேற்கொள்வதும் உடல்சுகங்களை தேடுவதும் உயிர்களை உயிர்வதை செய்ய வேடன் செடிகளுக்குள் மறைந்திருந்து உயிரினங்களை வலை வீசிப்பிடிப்பதற்கு நிகராகுமென எடுத்துரைக்கின்றது  திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

28/273:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று.மனதைக் கட்டுப்படுத்தும் வலிமையில்லதாவன் தவ வேடம் கொள்ளுதர் பசு புலித்தோலிட்டு பயிர் மேய்தல் போன்றாகும்.உள்ளத்தில் உறுதியில்லாத மனிதர்கள் பெண்,பொன், மண் மனை பொருளாசை என்ற ஆசைகளை கொண்ட மனிதர்கள் தவம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுவது புலியின் குணத்தை கொண்ட பசு போல தவத்தினை மேற்க்கொள்ள முயற்சிப்பதாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

28/272:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்.தான் குற்றமென அறிந்தும் அதனைச் செய்பவனிடம் வானம் போல் உயர்ந்த தவவலிமை இருந்தும் என்ன பயன்? மனிதர்கள் தாங்கள் மனதால்   செய்வது குற்றங்கள் என்று தெரிந்திருந்தும் அவற்றை செய்கின்ற மனிதர்களிடம் உயர்ந்த பண்புகள் இருந்தும் என்ன பயன் இதில் தவங்களை செய்து பெறுகின்றன தவவலிமைகளை பெற்றருந்தும் இந்த உலகில் இவர்களால் ஆகப்போகும் பயன்தான் என்னவாகும் ?என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்  

28/271:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.வஞ்சக மனம் படைத்தவனது தீய ஒழுக்கத்தை பிறர்அறிய வில்லையாயினும் தன்னுள் மறைந்திருக்கும் ஐம்பூதங்களும் கண்டு நகைக்கும்.வஞ்சகமான மனிதர்களின் பொய்யான ஒழுக்கத்தை ஏனைய மனிதர்கள் வாழ்வினில் புரிந்து கொள்ள விட்டாலும் வஞ்சகமனிதர்களின் உடம்புகுள் குடியிருக்கும் ஐந்து பூதங்களும் அவர்களின் செயல் கண்டு தங்களுக்குள்ளேயே சிரித்து மகிழும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .