Posts

Showing posts from October 25, 2018

36/351:திருக்குறள்-மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.மெய்ப்பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருளைன்று அறிந்தவர்க்கு சிறப்பில்லா பிறப்பு உண்டாகும் . மனிதவாழ்வியல் நெறிகளில் நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.அதுவே நல்ல அறிவுள்ள பிறப்பில்லை என்பதை இந்த வையகத்துக்கு அறியத்தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழ்மொழியாகட்டும்.