43/422:திருக்குறள்-அறிவுடைமை
சென்ற இடத்தால் செலவிடா தீதொரி நன்றின்பால் உய்ப்பதறிவு. மனம் போன போக்கில் செல்லாமல் தீயதை நீக்கி நல்வழி செல்வதே அறிவு.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்க்கைதனில் மனம்போனபோக்கில் வாழ்ந்து கொண்டுபோகமல் நல்லவற்றை மட்டும் வாழ்க்கைக்குள் சீர்திருத்தி எடுத்து வாழவேண்டும் தீயதை நீக்கி நல்வழியில் செல்வதே அறிவுடமையாகும் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.