Posts

Showing posts from December 18, 2018

45/450:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.நல்லவர் ஒருவரின் நட்பை விடுவது பலரைப் பகைத்துக் கொள்வதை விட தீமையுடையதாகும் .நல்ல மனிதர்களின் நட்புறவை பகைத்துக்கொண்டு வெறுத்து ஒதுக்கி விலகிப்போவது சமுதாயத்தில் பலருடன் பகைத்து கொள்வதை விட தீமையான செயலாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் குறளின் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

45/449:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை.முதலின்றி வாணிபம் செய்பவருக்கு லாபம் இல்லை அது போன்று நல்ல நட்பில்லார்க்கு இன்பம் இல்லை. சொந்த முதல் போட்டு வியாபாரம் செய்யாதவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் இருக்காது அதேபோல நல்ல நட்பு இல்லாதவர்களுக்கு சிறந்த வாழ்வியல் இருக்காது என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

45/448:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

45/448:இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.இடித்துரைப்பார் இல்லாத தனி மன்னன் பகை இல்லாமலேயே கெடுவான். நற்ச்சிந்தனைகளை எடுத்துரைப்பார் இல்லாத தனி அரசு பகை இல்லாமலேயே அழிந்து போகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.