Posts

Showing posts from August 4, 2020

114/1140:நாணுத் துறவுரைத்தல்

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு.நான் பட்ட துன்பம் அவர்கள் படாமையால் பேதைகள் என் கண்முன்னேயே சிரிப்பார்கள். ஓருவர் பட்ட கஸ்ட துன்பங்கள் போல் எல்லோரும் படுவதில்லை அதனால் அந்த துன்ப துயரங்களை அறியாதவர்கள் துன்பபட்டவர்கள் கண்முன்னேயே கேலியாக சிரிப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1139:நாணுத் துறவுரைத்தல்

அறிகிலார் எல்லோரும் என்றேஎன் காமம் மறுக்கின் மறுகும் மருண்டு.இதுவரை யாருக்கும் தெரியாது என்பதால் என் காமம் மயங்கித் தெருவெல்லாம் திரியும்.யாரும் அறியாத நிலையில் ஆண் அல்லது பெண்ணின் காம இச்சைகள் விரும்பி ஊரெல்லாம் அலைந்து திரிகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1138:நாணுத் துறவுரைத்தல்

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். உறுதியில்லார் உறுதியுடையார் என கருதாது காமம் மயங்கித் தெருவெல்லாம் திரியும்.ஆண் அல்லது பெண் உறுதியற்றவர்கள் அல்லது உறுதியில்லாதவர்கள் என்று பார்க்காது காமம் என்னும் காமத்தின் வேதனை ஊரெல்லாம் அலைந்து பெண்ணையோ ஆணையோ தேடித்திருயுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். 

114/1137:நாணுத் துறவுரைத்தல்

கடலன்ன காமம் உழந்தும் மடலேற பெண்ணின் பெருந்தக்கது இல். கடல் போன்ற காமத்தில் வருந்தினாலும் மடலேறாப் பெண் பிறவியே பெருமைகுரியது. அளவுக்கு அதிகமான காமம் உடலில் உண்டானாலும் பெண் பிறவியே மடல் ஏற சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1136:நாணுத் துறவுரைத்தல்

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென கண். காதலியை நினைத்து கண் மூடாததால் மடிலேறுதலை நள்ளிரவில் நினைப்பேன்.நினைத்த பெண்ணை அடைய வேண்டுமென்பதால் நித்திரை கொள்ளாமல் விழித்திருந்து பெண்ணின் இடை தேடி அழகிய உடலில் மடலேறி இன்பங்களை அனுபவிக்க நினைவுகள் இரவு முழுவது நிலைத்திருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1135:நாணுத் துறவுரைத்தல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். மடலுடன் மாலையில் படும் காமத்துன்பத்தை வளையல் அணிந்தவள் தந்தாள். அழகிய பெண்மணி மாலை நேரத்தில் அழகிய அழமான காதல்பார்வையை தந்து உடலை தொட்டு வருடும்படியாக சமிக்கைதந்தாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1134:நாணுத் துறவுரைத்தல்

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை.நாணமும் வீரமுமாகிய தெப்பம் எனை காம்ப்பெரு வெள்ளத்தில் தள்ளி விடுமோ? காதல் பார்வை என்பது அடக்கத்தையும் சிறந்த ஆண்மை அல்லது பெண்மையையும் நாணமாகி ஒழுக்கங்களை வெட்கத்தை விலக்கி காதலில் விழுத்த உதவும் தோணியாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1133:நாணுத் துறவுரைத்தல்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடேன் காமுற்றார் ஏறும் மடல் . நாணமும் வீரமும் முன்பிருந்தன் இன்றோ காமுற்றார் ஏறும் மடற்குதிரை உடையவளானேன்.வெட்கமும் நாணமும் உடலில் உறுதியும் கொண்டிருந்த உடல் இப்போது காம இச்சையுடையவர்கள் ஏறி அனுபவிக்கும் உடல் ஆகியதோடு இன்ரொரு உடலுக்கும் சொந்தமானதுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

114/1132:நாணுத் துறவுரைத்தல்

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.காமத்தை தாங்காத உடம்பு , உயிரும் வெட்கத்தை விட்டு மடல் எறத் துணியும் . உடலில் காம உணர்வு ஏற்பட்டு அதுவே அதிகமானால் உடலும் உயிரும் ஆண் பெண்மையை அடையவும் பெண்மை ஆண்மை அடையவும் வெட்கம் நாணம் அனைத்தையும் மறந்து உடலை அடைந்து காமத்தை தீர்கத்துணியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

114/1131:நாணுத் துறவுரைத்தல்

Image
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.காமத்தில் வீழ்ந்து வருந்துபவர்களுக்கு மடல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை.உடலால் ஏற்படுகின்ற காமத்தை வெல்ல ஆண் பெண்மையை அடைவதும் பெண் ஆண்மையை அடைவதை தவிர வேறு வழி எதுவுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .