Posts

Showing posts from May 14, 2020

109/1090:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.உண்டவர்க்கு மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளளை போலல்லாது காமம் கண்டாரிடத்தும் மகிழ்ச்சி தரும்.மதுபானங்களை குடித்தால்தான் குடித்தவர்களுக்கு இன்பம் தரும் குடிபானங்களை போல் அல்ல காமத்துப்பால் பார்க்கும் பார்வையால் காதல் மலருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1089:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

பிணையோர் மடநோக்கும் நாணும் உடையாட்கு  அணிஎவனோ ஏதில தந்து.பெண்மான் போன்ற அழகிய அஞ்சும் பார்வையும் நாணத்தையும் உடைய இவளுக்கு வேறு அணிகள் பயன்ற்றது.அழகிய பெண்மான் போல அழகையும் எழில்கொஞ்சும் பார்வையும்  வெட்கத்தையும் கொண்டுள்ள பெண்ணுக்கு செயர்கையாக அணியும் ஆபரணங்கள் தேவையில்லையென   எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1088:இன்பத்துப்பால் திருக்குறள்

109/1088: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு.போர்களத்தில் பகைவரும் அஞ்சும் என் வலிமை எழிலான இவள் நெற்றியின் பொருட்டு அழிந்து விட்டது.களத்தில் எதிரியையும் பயப்பிடவைக்கும் எனது மனஉறுதியை அழகான இந்த பெண்ணின் முகஅழகை வைத்தே அனைத்தும் அழிந்து விட்டதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1087:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.இப்பெண்ணின் நிமிர்ந்த முலைமேலிட்ட ஆடை மதயானையின் மேலிட்ட முகபாடம் போன்றது.பெண்களின் நிமிர்ந்த கொங்கைகளின் மேல் அணியப்பட்ட ஆடைகள் மதம்பிடித்த யானையின் மேலிட்ட முகபாடம் போன்றது போலிருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1086:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்  செய்யல மன்இவள் கண்.வளைத்த புருவங்கள் நேராக நின்று மறைத்தால் இவள் கண்கள் நடுங்குவதற்கு காரணமான துன்பத்தை செய்யாது . பீரு நேராக நின்று நேர்கொண்ட பார்வையை மறைத்தால் பெண்ணின் விழிகள் துடிப்பதற்கான பயத்தை செய்யாதிருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1085:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. இக்கண்கள் யமனோ கண்களோ பெண்மானோ இப்பெண்ணின் பார்வையில்  இம்மூன்றும் உள.இப்பெண்ணின் விழிகள் யமனோ இல்லை கண்கள்தானா அல்லது பெண்ணா அல்லது அனைத்தும் ஒன்று  சேர்ந்த  விழிகளின் பார்வையா அனைத்தும் உள்ளன இந்த பார்வையில் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1084:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன  கண். இப்பெண்ணின் கண்கள் கண்டவரது உயிரையுண்ணும் தோற்றத்துடன் அமைந்துள்ளன.அழகுமிகு  பெண்ணின் விழிகளில் வீழ்ந்தவர்களின் உயிரை உண்பது போல அவளின் பார்வை அமைவதுக்கும் அவளின் அழகிய விழிகளுக்கும் வேறுபாட்டை உயிர்களுக்கு உணர்த்துகின்றது  யமன் செய்யவேண்டியதை இப்பெண்ணின் கண்கள் செய்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1083:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.முன்பு நான் யமனை அறியேன்  இன்று அதனை அறிந்தேன் அது பெண்தன்மை கொண்டு போர் செய்யும் கண்களை யுடையது.முதலில் ஆண்கள் யமனின் பயத்தை அறிந்திருக்கமாட்டார்கள்   ஒரு பெண்ணின் பார்வை பட்டதும் அதனை அறிந்து கொள்வார்கள் அதுவே பெண்தன்மையை கொண்ட கண்களால் அம்பெறியும் தன்மையுடையதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.