Posts

Showing posts from October 14, 2018

32/317:திருக்குறள் இன்னா செய்யாமை

Image
எனைத்தானும் எஞ்ஞான்றும்  யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.என்றென்றும் எவருர்க்கும் எவ்வகையிலும் மனத்தளவிலும் துன்பம் செய்யாமை சிறப்பு.மனிதர்களின் வாழ்வியல் சிறப்பே மனதாலும் நினைவாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாது வாழ்வதே மிக சிறந்த வாழ்வியல் பொக்கிஷமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

32/316:திருக்குறள்-இன்னா செய்யாமை

இன்னா எனத்தான் உணர்ந்ததவை  துன்னாமை வேண்டும் பிறன் கண் செயல்.கொடியது என தான் அறிந்தவற்றை பிறர்க்குத்தான் செய்யாதிருக்க வேண்டும்.மனிதர்களின் வாழ்வியலில் தாங்கள் அறிந்தவற்றில் தீயவை என்று உணர்ந்தால் அவற்றை ஏனைய மனிதர்களுக்கு செய்யாது இருப்பது சமுதாயத்துக்கு உகந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

32/315:திருக்குறள்-இன்னா செய்யாமை

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.பிறர் துன்பம் தன் துன்பம் போல் கருதி  உதவாதவரிடத்தில் அறிவிருந்து பயன் என்ன ?மனிதர்களின் வாழ்வில் பிறரின் துன்ப துயரங்களை கண்டு மனமிரங்கி அதை தங்களின் துன்ப துயரங்களாக ஏற்றுக்கொண்டு உதவி புரியாத மனிதர்களிடத்தில் மிகுந்த அறிவு இருந்தும் அதனால் துயரப்படுபவர்களுக்கு என்ன பயன் அதனால் அறிவு மட்டும்  இருந்து எந்த பயனும்  இல்லை மற்றவர்களுக்கு துன்பம் வந்த வேளைகளில் உங்களின் துயரமாக கருதி உதவுவதே சிறப்பு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். 

32/314:திருக்குறள்-இன்னா செய்யாமை

Image
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.தீங்கு செய்தவரை தண்டிப்பது என்பது அவர் வெட்கி தலை குனியும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும்.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்வுதனில் மனிதனுக்கு மனிதன் தீங்குகள் செய்வதுண்டு தீங்கு செய்தவரை தண்டித்து அவர் செய்த தீங்கை நாமும் செய்வதைவிட அவர் வெட்கி தலைகுனியும் அளவிற்கு நாம் அவருக்கு நன்மைகளை செய்தால் தீமைகளை செய்தவர்கள் தாங்களாகவே காலச்சுழல்சியால் மனம்வருந்தும்படியாகும் அதனால் அவர்கள் வாழ்வில் திருந்தி வாழக்கூடுமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.