Posts

Showing posts from January 4, 2019

46/467:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.ஒரு செயலை செய்யத் தொடங்குமுன் அதனை முடிக்கும் வழி அறிந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பின்பு பிறகு பார்க்கலாம் என்பது தவறு. எண்ணத்தால் துணிந்தே எந்த செயலிலும் ஈடுபட்டவேண்டும் தொடங்கின்ற விடயங்களில் இச்செயலை முடிக்கமுடிமென்றால் மட்டுமே அதில் செயல்படத்தொடங்கவேண்டும் இப்போது தொடங்கலாம் பின் அது போகும் வழியில் போய் முடிக்கலாம் என நினைப்பது தவறான முடிவாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

47/466:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு.எதிரியின் பலமும், பலவீனமும் தெரியாது எதிர்க்கப் புறப்படுதல் , பகைவர் வெற்றிக்கு நாமே வழி வகுப்பதாகும்.எதிரிகளின் பலத்தையும் பலவீனங்களையும் அறிந்து கொண்டே அவர்களுடன் போரை தொடுக்க வேண்டும் அவற்றை அறியாதிருந்தால் பகைவர்களின் வெற்றிக்கு நாங்களே பாதை அமைத்து கொடுத்ததாக அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

47/465: திருக்குறள்-தெரிந்து செயல்வகை