Posts

Showing posts with the label 58/577 திருக்குறள் கண்ணோட்டம்

58/577:திருக்குறள்-கண்ணோட்டம்

Image
திருக்குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண் உடையார் கண்ணோட்டம் இல்லவர் இல்.  ( குறள்  577 -  அதிகாரம் :  கண்ணோட்டம் ) பொருள்: இரக்கமும் கண்ணோட்டமும் இல்லாதவர்கள் முகத்தில் இருக்கும் கண்கள் இல்லாதவர்களே ஆவர்; உண்மையான கண்களை உடையவர்கள் என்பவர் இரக்கக் குணம் கொண்டவர்களே ஆவர் (கண்ணோட்டம் இல்லாதவர் உண்மையான கண்களைப் பெற்றவர் அல்லர்). விரிவாக்கம்: மனித உடலின் ஐம்புலன்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கண்கள். ஆனால், முகத்தில் இரண்டு கண்கள் இருந்தும் பிறர் துயரம் கண்டு இரங்கும் கருணையும், மனிதநேயமும் ஒருவனிடம் இல்லையென்றால், அந்தக் கண்களால் என்ன பயன்? அந்த முகம் பார்வை அற்றது போலவே கருதப்படும். மாறாக, முகத்தில் கணlகள் இல்லாவிட்டாலும், நெஞ்சில் இரக்கமும் கண்ணோட்டமும் உடையவரே உண்மையான பார்வையைக் கொண்டவராவார். புறக்கண்களை விட அகக்கண்ணான அன்பும் கருணையுமே ஒரு மனிதனுக்குரிய உண்மையான அழகு மற்றும் சிறப்பு என்பதை வள்ளுவர் இக்குறளில் ஆழமாகப் புலப்படுத்துகிறார். English Translation: Thirukkural: Kannottam Illavar Kannilar; Kann Udaiyaar Kannottam Illavar Il. Meaning: Those who...