Posts

Showing posts from May 1, 2019

56/560:திருக்குறள்- கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்  காவலன் காவான் எனின்.மன்னன் குடிமக்களின் நலன் காப்பாற்றனாயின் பசுக்கள் தரும் பால் குறையும் அந்தணர் நூல் மறப்பர்.அரசாங்கத்தின் ஆளுனர்கள் நாட்டுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால் பசுமாடுகள் தரும் பாலும் குறையும் பிராமணர்களும் பூநூலை மறப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

56/559: திருக்குறள்:கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.மன்னன் நீதி முறை தவறினால் பருவமழை தவறி வானம் பெய்யாது பொய்த்து விடும். அரசாங்கத்தின் ஆளுனர்களின் நீதி முறைகள் தவறினால் வான் மழை பொழியாது நின்று விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். 

56/558:திருக்குறள்-கொடுங்கோன்மை

இன்மையின் இன்னாது உடமை முறை செய்யா மன்னவன் கோற் கீழ்ப்படின்.நெறியற்ற  மன்னனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தால் வறுமையை விட பொருளுடைமை துன்பம் தரும்.சிறந்த நெறியற்ற அரசாங்கத்தின் ஆளுனர்களின் கீழ் மக்கள் வாழ்ந்தால் கொடிய வறுமையை விட பொருளுடைமையில்லாமல் துன்பத்தை விளைவிக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

56/557 :திருக்குறள-கொடுங்கோன்மை

துளியின்மை  ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.மழையின்மையால் உலக உயிர்கள் வாடுதல் போல் அரசன் அன்பில்லையேல் மக்கள் துன்புறுவர்.வான் மழை பொழியாது பயிர்கள் வாடி வதங்குவது போல  அரசாங்க ஆளுனர்களின் ஆதரவில்லாத மக்களின் வாழ்க்கை நிலையில் துன்புறுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

56/556:திருக்குறள்-கொடுங்கோன்மை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை  அஃதின்றேல் மன்னவாம் மன்னர்க் கொளி.மன்னனுக்கு புகழ் நிலை பெறுதல் நீதியினாலே ஆகும் அந்நீதியில்லையே அவன் புகழ் நிலைக்காது.அரசாங்க ஆளுநர்களுக்கு புகழ் நீதி நெறிப்பட அரசாங்கத்தை ஆட்சி புரிவதாலேயே   அந்த நீதி முறை தவறினால் அரசாங்க ஆளுநர்களின் புகழ் நிலைத்து நிற்காதென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.