Posts

Showing posts from September 28, 2020

119/1190:பசப்புறு பருவரல்

Image
குறள் 1190: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. பொருள்: காதலை நினைத்துப் பார்த்த உடனே அது குறையாத பெரு மகிழ்ச்சியைத் தருவதால், மதுவைக் காட்டிலும் காதலே மிகவும் இனிமையானது. விரிவாக்கம்: வள்ளுவர் காமத்துப்பாலில் 'அவர்வயின் விதும்பல்' அல்லது 'காதல் சிறப்பைக் கூறல்' எனும் அதிகாரத்தில், மதுவின் லாகிரியை விடக் காதலின் லாகிரி எப்படி உயர்ந்தது என்பதை அற்புதமாக ஒப்பிட்டுக் காட்டுகிறார். 1. ஒப்பீடு (கள் vs காமம்): மதுவை அருந்தினால் மட்டுமே அது ஒருவனுக்கு மயக்கத்தையும் இன்பத்தையும் தரும்; அருந்திய பின் அந்த இன்பம் மெல்ல வற்றிவிடும். ஆனால் காதல் அப்படியல்ல, காதலித்தவரைக் கண்பார்ப்பது மட்டுமன்றி, அவரைப் பற்றி மனதால் நினைத்துப் பார்த்தாலே (உள்ளினும்) அது தீராத பேரானந்தத்தைத் தரும். 2. நினைவின் ஆற்றல்: நேரில் பார்க்க முடியாத பிரிவின் தருணங்களில் கூட, காதலரின் நினைவுகள் தரும் சுகம் சொல்லிலடங்காதது. காதலின் இன்பம் கால எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; அது பழைய நினைவுகளின் வழியாகவும், எதிர்கால எதிர்பார்ப்புகளின் வழியாகவும் எப்போதும் மனதிற்குள் புதுப்பித்துக் கொண்டே இருக...

119/1189:பசப்புறு பருவரல்

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். பிரிவை இசைவித்த தோழி நலம் எனில் பட்டுப்போல் என் மேனி பசக்கட்டும். பிரிவை ஏற்படுத்த முன் வந்த மனது நன்றாக இருக்குமானல் ஆசைப்பட்ட மனது அவருக்காக பசலையுடன் காத்திருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்

119/1188:பசப்புறு பருவரல்

பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர் என்பார் இல். இவள் பசலையுற்றளள் என பழிக்கிராரே தவிர அவர் பிரிந்தாரே என்று சொல்வார் இல்லை.இவள் காமநோயால் வாடுகிறாள் என கேலிசெய்கின்றார்கள் ஆனால் பெண்ணின் துணை பிரிந்து சென்றானே என்று கவலை கொள்வார் யாருமில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

119/1187:பசப்புறு பருவரல்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.தழுவி இருந்த நான் சிறிது தள்ளிப்படுத்தேன் அவ்வளவிற்கே பசலை கொட்டிக் கிடந்தது. சேர்ந்து படுத்திருந்ததில் இருந்து விலகிப்படுத்தபோது ஆசை அங்கே நிறைந்து வழிந்து இருந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

119/1186:பசப்புறு பருவரல்

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. இருள் , வெளிச்சம் மறைவதை எதிர்பார்பது போல் பசலை தலைவன் தழுவாமையை எதிர்பார்க்கும். பகல் இரவு ஆகுவதை பார்த்து காத்திருப்பதுபோல மனைவி கணவனின் இறுகிய காதல் தழுவலுக்காக மனமேங்கி காத்திருப்பளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

119/1185:பசப்புறு பருவரல்

உவக்காண்எம் காதலர் சொல்வார் இவகாண்என் மேனி பசப்பூர் வது. அங்கே பார் காதலர் சொல்கிறார் : இங்கே பார் என் மேனி மேல் பசலை வந்து படர்கிறது. மனதுக்கு பிடித்தவர் சொல்கிறார் இதோ பாருங்கள் உடல் மீது காதல் ஆசை வந்து உடல் முழுவதும் பரவுகின்றது அதனால் காதல் ஆசை உண்டாகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

119/1184:பசப்புறு பருவரல்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. பேசுவதும் நினைப்பதும் அவரேயே இருந்தும் பசலை வந்தது கள்ளத்தனமா வேறா? நினைப்பதும் பேசுவதும் காதல் கொள்வதும் அவர்மேலே இருந்தாலும் காதல் ஆசை வந்தால் அது முறையற்ற ஒன்றாகுமா? என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

119/1183:பசப்புறு பருவரல்

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்தது . காமத்தையும் , பசலையையும் கைம்மாறாக தந்து சாயலையும் நாணயும் எடுத்துக்கொண்டார். உடல் ஆசையையும் காதல் ஆசையையும் தந்துவிட்டு அழகையும் வெட்கத்தையும் பெற்றுக்கொண்டாரென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

119/1182:பசப்புறு பருவரல்

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தேன் மேனிமேல் ஊரும் பசப்பு. தந்தவர் அவர் எனும் பெருமை கொண்டு பசலை படர்ந்து என் மேனிமேல் ஏறும்.காதலின் பிரிவினையை காதலரே உருவாக்கிய கொண்டார் என்ற நினைவுகளுடன் காதலின் ஆசைகள் அணைத்தும் உடல்மீது பரவுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

119/1181:பசப்புறு பருவரல்

Image
நயந்தவர்க்கு நல்காமெ நேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற. பிரிவை விரும்பியவர்க்கு இசைந்தால் கொடுமைக்கும் இசைந்த பின் என் பசலையை யாரிடம் சொல்லுவது? பிரிந்து செல்லவிரும்பியவருக்கு அவர் விரும்பியபடியே அனுமதி அளித்து விட்டு வரும் காதல் துயரத்தை யாரிடம் போய் சொல்வது ? தினமும் ஒரு குறளும் பொருளும் வரிவாக்கமும்.