Posts

Showing posts from December 10, 2018

45/447:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.தவறுகளை சுட்டிக்காட்டும் நன்பர்களை உடையவரை யாராலும் கெடுக்க முடியுமா.இந்த உலகத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் தவறுகள் நிகழ்வது உண்டு அந்த தவறுகளை எங்களை சுற்றியிருப்பவர்களே சுட்டிக்காட்டவேண்டும் அப்படி சுட்டிக்காட்டும் போது தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்புகள் மனிதர்களுக்கு அமையலாம் தவறுகளை திருத்துகின்ற உற்றார் உறவினர் நன்பர்களும் சுற்று சூழலில் அமைந்தால் அந்த சமுதாயத்தை யாராலும் சீர்குலைக்க முடியாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள். திருக்குறள் - 447 இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். பொருள்: தவறுகளைச் சுட்டிக்காட்டும் சான்றோரையும் நண்பர்களையும் துணையாகக் கொண்டு வாழ்பவரை, யாராலும் கெடுக்கவோ அழிக்கவோ முடியாது. விரிவாக்கம்: மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவறுகள் நிகழ்வது இயல்பு. அந்தத் தவறுகளை நம்மைச் சுற்றியிருப்பவர்களே சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் சுட்...

45/446:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

தக்காரினத்தானாய்த் தான்னொழுக வல்லானைச் சென்றார் செயக்கிடந்ததில்.பெரியவர்களை துணையாகக் கொண்டவனை பகைவர்கள் என்ன செய்ய முடியும்? வாழ்வியல் சிறப்பினை பெற்ற பெரியவர்களை வாழ்வியலில் துணையாக கொண்ட மனிதர்களை பகைவர்கள் இந்த உலகில் என்ன தீங்குகளை செய்து விட முடியும் ? என கேள்வியேழுப்பும் திருக்குறளாக அமைந்து எடுத்துரைக்கின்ற திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.