Posts

Showing posts with the label 127/1262: அவர்வயின் விதும்பல் திருக்குறள்

127/1262: அவர்வயின் விதும்பல்

Image
127/1262:திருக்குறள்: இலங்கிழாய் இன்று மறப்பின்என்  தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. பொருள்: விளங்கும் அணிகலன்களை அணிந்த தோழியே! என்னை விட்டுப் பிரிந்திருக்கும் என் தலைவனை நான் ஒரு கணமேனும் மறக்க நினைத்தால், என் உடலானது பேரழகை இழந்து மெலிந்து போகும்; அதன் விளைவாக என் தோள்களிலிருந்து அணிகலன்கள் தாமே கழன்று விழுந்துவிடும். விரிவாக்கம்: தலைவனின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைப் பொறுக்க இயலாத தலைவியைத் தோழி தேற்ற முயல்கிறாள். அதற்குப் பதிலாகத் தலைவி, "விளங்கும் அணிகலன்களை அணிந்த தோழியே! அவனது நினைவுகளை மறந்துவிட்டு அமைதியாக இருக்குமாறு நீ கூறுகிறாய். ஆனால், அவனை நான் மறக்கத் தொடங்கினால், என் மனதிற்கு ஏற்படும் வேதனையால் என் உடல் மேலும் மெலிந்து, தோள்கள் தன் எழிலை இழந்து சிறுத்துவிடும். தோள்கள் மெலிந்தால் நான் அணிந்திருக்கும் அணிகலன்கள் நழுவி விழுந்துவிடுமே அன்றி என் துயர் தீராது" என்று கூறி, அவனது நினைவே தன் உயிரைப் பிணைத்து வைத்திருக்கும் சக்தி என்பதை நயம்பட எடுத்துரைப்பதாக இக்குறள் அமைகின்றது. English Translation: Thirukkural: Ilangizhaai Indru Marappinen Tholmael Kalangazhiyum Ka...