Posts

Showing posts from April 16, 2019

56/555:திருக்குறள்- கொடுங்கோன்மை

அல்லற்பட்டு அற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை. நீதியற்ற அரசு செலுத்தாமையால் மக்கள் வருந்தி விடும் கண்ணீரே அவனது செல்வத்தை அழிக்கும் கருவி. நீதி நெறியில்லாத அரசாங்கம் சிறந்த முறையில் சிறந்தவற்றை வழக்காமையால் நாட்டுமக்கள் விடும் கண்ணீரே அந்த அரசாங்கத்தை வீழ்த்தும் மக்களின் ஆனையாகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

56/554:திருக்குறள் கொடுங்கோன்மை

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.நீதி தவறி ஆட்சி செலுத்தும் மன்னன் அச்செலால் குடிகளையும் பொருளையும் ஒருங்கே இழப்பான்.அரசாட்சியில் நீதி தவறி ஆட்சி புரியும் அரசாங்கம் நாட்டு மக்களையும் அதன் உடமைகளையும் ஆரசாட்சியையும் ஒன்றாகவே இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

56/553:திருக்குறள்- கொடுங்கோன்மை

 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் . நாள் தோறும் நாட்டு நன்மை தீமைகளை  ஆராயாது ஆட்சி செய்யும் மன்னன் நாள் தோறும் நாட்டை இழந்து வருதல் போன்றது தினம்தோறும் நாட்டுமக்களின் நன்மை தீமைகளை அறியாது  அரசாங்கம் ஆட்சி நாடத்தி வந்தால்  அந்த நாட்டையும் மக்களால் கொடுக்கப்பட்ட பதவிகளையும் சிறிது சிறிதாக இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் 

56/552:திருக்குறள்- கொடுங்கோன்மை

 வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு. செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடம் பொருள் வேண்டுதல் வழிப்பறி செய்வோன் வேல் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும்.அரசாங்கம் நடத்தும் ஆட்சியாளர்கள் மக்களிடம் பொன் பொருள் பணம் பறித்தல் வழிப்பறி செய்பவர்கள் ஆயுதங்களுடன் நின்று கொள்ளையடிப்பது போன்றதாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

56/551:திருக்குறள்- கொடுங்கோன்மை

கொலைமேற்கொண்டாரிற் கொடியதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.குடிகளை வருந்தி  நீதி நெறியின்றி அரசாளும் மன்னன் கொலைத்தொழில் செய்பவனைவிட கொடியவன்.இந்த உலகின் அரசியல் செய்யும் அரசுகள் ஆக இருந்தாலும் சரி அல்லது போராட்ட அமைப்புகள் ஆக இருந்தாலும் சரி குடிகளை வருத்தி நீதி நெறியின்றி மக்களை அடிமைப்படுத்தி  அரசாள நினைக்கும் அனைத்து அரசாட்சி ஆளார்களும் கொலைத்தொழில் செய்கின்றவர்களை விட கொடியவர்கள் என்றே எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ  பாலசுப்பிரமணியம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

55/550:திருக்குறள்- செங்கோன்மை

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். அரசன் கொடியவர்களை கொலையின் மூலம் தண்டித்தால் பயிரின் நடுவிலுள்ள புற்களை அகற்றுதல் போன்றதாகும்.அரசாங்கம் குற்றம் செய்த கொடியவர்களை தூக்கு தண்டனை மூலம் தண்டித்தால் வயலில் பயிரிட்ட பயிர்களின் நடுவில் புற்களை அகற்றி களை எடுப்பது போன்றதாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

55/549:திருக்குறள்- செங்கோன்மை

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடித்தல் வடுவன்று வேந்தன் தொழில்.குடிமக்கள் வருந்தாது தானும் வருத்தாது காத்து குற்றம் புரிந்தவர்க்கு தண்டனையளித்து வாழ்வது அரசன் தொழில். அஃது அவனுக்கு இழிவாகாது.அரசாங்கம் நாட்டில் வாழும் மக்களை வருத்தாது அரசாங்கமும் நீதி நேர்மை சட்ட ஒழுங்குகளை காத்து கொண்டு குற்றம் புரிந்தவர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்து அரசாங்கத்தை ஆட்சி செய்வது அரசின் கடமை அஃது அரசாங்க ஆட்சிக்கு என்றுமே கூடாத செயலாகாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

55/548:திருக்குறள்- செங்கோன்மை

எண்பத்த்தான் ஒரா முறைசெய்யா மன்னவன் தண்பத்த்தான் தானே கெடும்.நீதி வேண்டியோர் எளிதாக்கண்டு பேசத்தக்க நிலையிலிருந்து அவர் கூறியவற்றை ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் கீழ் நிலையடைந்து தானே கெடுவான்.நீதி கேட்டு வரும் மக்களின் நிலையை அறிந்து அவர்களின் வார்த்தைகளை எளிதாக புரிந்துகொண்டு அவர்கள் கூறியவற்றிலிருந்து சரி பிழைகளை சீர் தூக்கிப்பார்த்து நடுநிலையுடன் ஆட்சி செய்யாத ஆளுனர்கள் மக்களின் வெறுப்புகளுக்கு ஆளாகி அழிந்து போவர்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

55/547:திருக்குறள்-செங்கோன்மை

இறைகாக்கும் வையகமெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.அரசன் உலகம் முழுவதும் காப்பான் , நெறிதவறாத மன்னனின் செங்கோலாட்சி அவனைக் காக்கும்.நாட்டை ஆளுபவன் உலகத்தை காப்பான் நீதி நேர்மை அறநெறி தவறாத அரசாங்கங்களின் சிறந்த ஆட்சியை நாட்டை ஆளுபவனைக்காக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

55/546:திருக்குறள்-செங்கோன்மை

வேலன்று வெற்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடா தெனின். அரசனுக்கு வெற்றிதருவது போர் கருவியில்லை , நீதி தவறாத அவன் செங்கோலாட்சியேயாகும். அரசாங்கங்களுக்கு சிறந்த அரசாங்கம் என்று பெயர் எடுக்க உதவுவது  அன்னிய நாடுகளுடன் போர் தொடுப்பதுமல்ல போருக்கு பாவிக்கப்படும் யுத்தக்கருவிகளுமல்ல நீதி நேர்மை சிறந்த அரசாங்கத்தின் ஆட்சியாகுமென  என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

55/545:திருக்குறள்-செங்கோன்மை

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் வினையுளும் தொக்கு.நெறிதவறாமல் ஆட்சி புரியும் மன்னனது நாட்டில் காலம் தவறாமழையும் , குறையாது விளைப்பொருளும் ஒருங்கே உண்டாகும்.மிக சிறந்த நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் நாட்டில் போகம் தவறாத மழையும் சிறந்த விளைச்சலையும் ஒன்று சேர்ந்தே உண்டாக்கி மக்களின் வாழ்வை மகிழ்வாக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

55/544:திருக்குறள்- செங்கோன்மை

குடிதமீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.குடிமக்கள் மீது அன்பு செலுத்தி அரசாளுகின்ற மன்னனின் அடிகளை அடைக்கலமாக கொண்டு இவ்வுலக உயிர்கள் வாழும்.நாட்டுமக்கள் மீது அன்பும் பண்பும் பணிவும் இரக்கமும் நடுநிலைமையையும் கொண்டு அரசாளுக்கின்ற அரசாங்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மன நிறைவுடன் மக்கள் வாழுவிருப்புவார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

55/543:திருக்குறள்- செங்கோன்மை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் . மன்னனது செங்கோல் அந்தரணரது நூலுக்கும் அறத்திற்கும் காரணமாக நிலைப் பெற்றிருப்பதாகும்.கல்வியை கற்று மக்கள் அறிவை வளர்த்துக்கொள்ள அறிவுடைய நூல்களையும் நூலகங்களையும் அடிப்படை வசதியாக அமைத்து கொடுக்கவெண்டியது ஆட்சி புரியும் அரசாங்கங்களின் கடமையாகும் அதுவே சிறந்த ஆட்சிக்கான சான்றிதழ்கள் ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் .  அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் 

55/542:திருக்குறள் - செங்கோன்மை

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி. உலக உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன அதுபோல மக்கள் மன்னனது செங்கோல் கண்டு வாழ்வார்.உலகத்தில் வாழும் உயிரினங்கள் வான்மழையை நம்பியே உயர்வாழுகின்றன அந்த மழையில்லாமல் உயிர்கள் வாழ்வது கடினம் அதேபோன்று மக்கள் அரசாங்கத்தின் சிறந்த அரசாட்சியை பொறுத்தே மகிழ்ச்சியாக வாழ்வதா இல்லையா என்பது அமையும் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

55/541:திருக்குறள்-செங்கோன்மை

ஓர்ந்துகண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய்வஃதே முறை.குற்றங்கள் ஆராய்ந்நு எவரிடத்தும்  இரக்கமின்றி நடுநிலைமையோடு குற்றத்திறகேற்ற தண்டனை அளிக்கவேண்டும்.மனிதர்களின் வாழ்வில் குற்றக்கடித்தல் நிகழக்கூடும் அப்படியான குற்றக்கடித்தல்களுக்கு யாருக்கும் இரக்கமின்றி நடுநிலையான நீதியை வழங்கவேண்டும் அப்படியான நீதியையே இந்த உலகம் விருப்புமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.