Posts

Showing posts from August 21, 2019

73/730:அவையஞ்சாமை திருக்குறள்

Image
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக்கற்ற செலச்சொல்லாதார்.மேடைக்கு அஞ்சி , தாம் கற்றவற்றை எடுத்து சொல்ல இயலாதவர் இருந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவார்.சபைக்கு பயந்துகொண்டு தாங்கள் படித்தவற்றை எடுத்துரைக்க முடியாதவர்கள் வாழ்ந்தாலும் இறந்தவர்களாகவே மனிதர்களால் கருதப்படுவார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

73/729:திருக்குறள்- அவையஞ்சாமை

Image
கல்லாதவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்வார். கற்றறிந்தும் அறிவுடையோர் அவைக்கு அச்சுபவர் கல்வி கல்லாதவரை விட கீழானவர். அறிஞர்கள் வீற்றிருக்கும் சபைதனில் அறிவுடையோருக்கு பயந்து அஞ்சுபவர்கள் படிக்காதவர்களை விடவும் கீழ்த்தரமானவர்களெயென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

73/728அவையஞ்சாமை திருக்குறள்

Image
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லாதார். நல்லோர் அவையில் எடுத்துச்செல்ல இயலாதவர் நூல் பலவற்றை படித்தும் பயனில்லை.இனிய சபைதனில் எடுத்துக்கூறக்கூட வல்லமையற்றவர்கள் பல நூல்களை படித்திருந்தும் அதனால் எந்த பயனுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

73/727:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
பகையத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்றநூல்.அவைக்கு அச்சுபவன் கற்றநூல் போரில் வீரமற்றவன் பிடித்த வாள் போன்றது. மாபெரும் சபைகளுக்கு அஞ்சுபவர்கள் படித்தநூல்கள் களத்தில் வீரமில்லாதவர்களிடமிருந்த வாள்களைப்போன்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

73/726:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொன்டென் நுண்ணவை அச்சு பவர்க்கு.வீரமற்றவருக்கு வாளோடு என்ன உறவு ? மேடைப்பயம் உள்ளவர்க்கு நூலோடு என்ன உறவு ? பயந்தவர்கள் வாளை வைத்திருந்து அதன் உடன் உறவு கொள்வதில் என்ன அர்த்தமிருக்கின்றது ? அதேபோல மேடையில் பேசப்பயப்பிடும் மனிதர்கள் புத்தகங்களுடன் உறவுகொண்டு அவற்றை வாசித்து என்ன பயனை அடையப்போகின்றார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

73/725:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
ஆற்றின் அளவறித்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு.மாற்றார் அவையின் வினாவிற்கு மறுமொழி சொல்ல தருக்க நூற்பொருள் அறிந்து கற்க வேண்டும்.மாபெரும் சபைகளில் பேசும்போது பல குறுக்கு கேள்விகள் வரலாம் அவைகளுக்கு சிறந்த மறுமொழி தரக்கூடியதாக பேசும் திறனை இலக்கியத்திலும் இலக்கணத்திலும் கற்றிருக்கவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

73/724:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். கற்றவர் முன் கற்றதை எடுத்துக்கூற வேண்டும் . மிக்க கற்றவரிடத்தில் மீதத்தை கற்றுக்கொள்ளக.படித்வர்களிடத்தில் நாம் படித்தவற்றை எடுத்துக்கூறவேண்டும் நன்றாக படித்தவர்களிடத்தில் அவர்களின் திறமைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

73/723:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
பகையத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சாதவர்.போரில் அஞ்சாது இறக்க வல்லவர் பலர். அவையில் பேச அஞ்சாதவரே மிகசிலர்.யுத்தகளத்தில் சாவுக்கு தயங்காதவர்கள் பலர் இந்த உலகில் ஆனால் மாபெரும் சபைகளில் பேச்சுதிறன் கொண்டவர்கள் சிலரே என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

73/722:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் கற்ற செலச்சொல்லுவார்.கற்றவர் அவையில் தாம் அறிந்தவற்றை எடுத்துச் சொல்ல வல்லவரே கற்றவருள் கற்றவர் ஆவார்.படிதவர்கள் சபையில் தாங்கள் படித்தறிந்தவற்றை படித்தவர்களே தெளிவாக அறிந்து கொள்ளும்படி விளக்க்மாக எடுத்துரைக்கும் அறிவாளிகளே அறிவாளிகளில் அறிவாளியாவார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

73/721:திருக்குறள்-அவையஞ்சாமை

Image
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்து தூய்மையவர்.சொற்பொழிவை அறிந்தவர் அவையின் தன்மையறிந்து அறிஞர் நிறைந்த அவையில் பிளைப்பட பேசமாட்டார்.நல்ல பேச்சு சொற்களின் திறன் அறிந்தவர்கள் மேடைகளில் நிறைந்த சிறந்த பேச்சாளர்கள் மத்தியில் தவறாக பேசமாட்டார்களென.எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.