123/1225:பொழுதுகண்டு இரங்கல்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.காலைக்கு நான் செய்த நன்மை யாது? மாலைக்கு நான் செய்த தீமை யாது ? இரண்டும் வேறுவகையாக வருகிறது. காதல் உள்ளங்களின் வேதனை காலைக்கும் மாலைக்கும் நாம் என்ன நன்மையையும் தீமையையும் செய்தோம் எம்மை இப்படி வாட்டுகின்றதே என உள்ளத்தால் வாடும் இதயங்களின் புலம்பலென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் குறளின் புலமை பாலாஜி பாலசுப்பிரமணியம்.