3/22:திருக்குறள்-நீத்தார் பெருமை
திருக்குறள் (3/22) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று. பொருள்: துறவிகளின் பெருமையை இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்வது, இந்த உலகத்தில் பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணி அளவிட முற்படுவது போன்றதாகும். விரிவாக்கம்: இந்த உலகத்தில் மனிதர்கள், உண்மையான துறவிகள் காட்டிய நல்வழியில் நடப்பதே வாழ்வியல் நெறிக்கு உகந்ததாகும். பிறந்து இறந்தவர்களை எப்படி எண்ணி முடிக்க முடியாதோ, அதேபோல்தான் துறவிகளின் பெருமையும் எண்ணிலடங்காதது. உண்மையான துறவிகள் மக்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை; அப்படி எதிர்பார்ப்பவர்கள் போலித் துறவிகளே என்பதை இக்குறள் உணர்த்துகிறது. Thirukkural: Thurandhaar Perumai Thunaikkoorin Vaiyathu Irandhaarai Ennikkondratru. Meaning: Attempting to measure the greatness of those who have renounced worldly desires is as impossible as counting all the dead souls of this world. Explanation: Following the path shown by true ascetics is the ideal way of life. Just as it is impossible to count every person who has ever lived and died in this world, the greatn...