Posts

Showing posts from April 23, 2020

107/1070:திருக்குறள்-இரவச்சம்

கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்.இரப்பவனுக்கு இரக்கும் போதே உயிர் போகின்றதே உள்ள பொருளை மறைப்பவர்க்கு உயிர் எங்கு சென்று ஒளியுமோ? பிச்சை எடுப்பவர்கள் பிச்சையை எடுக்கும்போதே இறக்கின்றார்கள் அனைத்து வசதிகளும் உள்ள மக்கள் வைத்துக்கொண்டே இல்லையென்று பொய்யை கூறுபவர்களின் உயிர்கள் எங்கே போய் ஒளிந்து கொள்ளுமோயென ? எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

107/1069:திருக்குறள்-இரவச்சம்

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.இரத்தலை நினைத்தால் உள்ளம் கரையும் இல்லை என்று சொல்வதின் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.பிச்சையெடுத்து வாழ்பவர்களின் வாழ்வை நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது உள்ளவர்கள் கொடுத்துதவாதபோது மனம் வேதனைப்படுகின்றது இருப்பதையே இல்லையென்று மறைக்கும்போதே மனிதமனம் ஏற்றுக்கொள்ளமறுக்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

107/1068:திருக்குறள்-இரவச்சம்

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.இரப்பு எனும் பாதுகாப்பற்ற மரக்கலம் கொடுக்காமல் மறைத்தல் எனும் வலிய பாறையோடு மோதினால் பிளந்து விடும். வைத்துக்கொண்டு இல்லையென கூறும் இரக்கமில்லாத மனமுடைய மனிதர்களின் நெஞ்சில் பிச்சை எடுத்து வாழ்வை நாடத்திவரும் வருமானமற்ற படகு மோதினால் மனமுடைந்து வாழ்க்கையே வெறுத்துபோகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

107/1067:திருக்குறள்-இரவச்சம்

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.இரக்க செல்பவரிடமெல்லாம் பொருள் கொடுக்காமல் மறைப்பவரிடம் இரக்காதிருங்கள் என்றுறைப்பது நன்மை.அனைத்து வசதிகளும் இருக்குமிடத்துக்கு பிச்சை எடுக்க வீடுகள் தேடிவந்தோருக்கு தானத்தை வழங்காது மறைக்கும் மனிதர்களிடம் பிச்சையை எடுப்பவர்களே என்றும் கையை ஏந்தாதீர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

107/1066:திருக்குறள்-இரவச்சம்

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். தன் பசுவிற்கு தண்ணீர் தாருங்கள் என்று இரத்தலைப்போல அவன் நாவிற்க்கு இழிவு தருவது வேறில்லை.பசுமாட்டுக்கு தாகத்தைதீர்த்து வைக்க தண்ணீரை யாசித்து தாகத்தை தீர்தாலும் யாசித்தால் நாவுக்கி ஏற்படுகின்ற இழிவு என்றென்றும் இழிவேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

107/1065:திருக்குறள்-இரவச்சம்

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னூங்கினியது இல்.தன் முயற்சியால் வந்தது தெளிந்த நீர் போன்ற கூழானாலும் அதை உண்ணுவதை விட மேம்பட்ட இன்பம் வேறில்லை. மனிதர்களின் உடலை வருந்தி உழைக்கின்ற எவ்வகை உழைப்பானாலும் உழைத்து உண்பது கூழோ கஞ்சியோ அதுவே வாழ்வில் சிறந்த அமிர்தமாகும் அதை விட மேலான சிறந்த இன்பம் இந்த உலகில் இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

107/1064:திருக்குறள்-இரவச்சம்

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. உணவிற்கு வழியில்லையென்றாலும் , இரவாமல் இருக்கு பண்பு , உலகெல்லாம் பெற முடியாத சிறப்புடையது.மனிதர்கள் வாழுகின்ற வாழ்க்கையில் உணவிற்கு வழியில்லாமல் வாடுகின்ற அளவிற்கு வறுமை அழைத்து செல்லக்கூடும்.அப்படியொரு நிலைமையில் கூட பிச்சை எடுத்து வாழாது இருப்பதே மனித வாழ்வின் சிறப்பாகும்.மனிதர்களின் முயற்சியில் வறுமையிலும் வாழ்க்கையை சீர்படுத்தி வாழ்வதே இந்த உலகில் பெற முடியாத சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

107/1063:திருக்குறள்-இரவச்சம்

இன்மை இடுப்பபை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல்.வறுமையினால் வரும் துன்பத்தை இரத்து தீர்ப்போம் என முயற்சியைக் கைவிட்டால் அதை விடக் கீழ்த்தரமானது வேறில்லை.கஸ்ட துன்பங்கள் வரும்போது யாசித்தே வாழ்ந்து விடுவோம் என நினைத்து முயற்சிக்காது வாழ்க்கையை நடாத்தினால் அதைவிட இழிவான வாழ்வு எதுவுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

107/1062:திருக்குறள்-இரவச்சம்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.உலகைப் படைத்த இறைவன் இவன் இரந்து உயிர் வாழ வேண்டும் என்று விதித்தானாயின் அவன் எங்கு அலைந்து கெடுவானாக.இந்ந உலகில் மனிதர்களை படைத்த இறைவன் வாழவும் ஒரு வழி அமைந்திருப்பான் அதானால்தான் மனிதர்களுக்கு மதிநுட்பத்தை ஆண்டவன் வழங்கியுள்ளான் அதை மனிதர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதிலேயே வாழ்க்கையின் சிறப்பு அடங்கியுள்ளது மனிதர்கள் பிச்சை எடுப்பதா ? அல்லது மதியால் விதியை வென்று வாழ்வில் சிறப்படைவதா என்று.விதியை மதியால் வெல்லமுடியாத மனிதர்களுக்கு இந்த உலகத்தில் எங்குசென்றாலும் அலைந்தே கெடுவார்களென எடுத்துரைக்கின்றது குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம் . கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

107/1061:திருக்குறள்-இரவச்சம்

Image
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடியுறும். தன்னிடம் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் கண்போன்ற சிறந்தோரிடத்தில் இரவாமல் இருப்பதே கோடி நன்மை. தானங்களை வழங்ககூடியவர்கள் வசதியிருந்தும் அதை ஒருபோதும் ஏழைகளுக்கு மறைக்காமல் வழங்கமுன்வந்தாலும் அவர்களுடமிருந்து தானங்களை யாசிக்காமல் இருப்பதே கோடியிலும் கோடி சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.