Posts

Showing posts with the label 31/301 திருக்குறள் வெகுளாமை

31/301:திருக்குறள்-வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். ஒருவன் கோபம் பலிக்கக் கூடிய இடத்தில் தன் கோபத்தை அடக்கவேண்டும் பலிக்காத இடத்தில் அடக்குவதும் அடக்காமிருப்பதும் ஒன்றே.மனிதர்களே நீங்கள் கோபம் கொள்ளும் போது அந்த கோபம் நீங்கள் கோபம்கொள்ளுகின்ற இடத்தில் சாத்தியப்படுமா என தெரிந்து கொண்டே கோபப்படவேண்டும் உங்கள் கோபம் சாத்தியபடாதா இடத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை அடங்கினாலும் ஒன்றுதான் அடக்கவிட்டாலும் ஒன்றுதான்.அதலால் நீங்கள் எக்காரியம் செய்யினும் அக்காரியத்தை செய்யமுன் ஒரு தடவைக்கு பல தடவைகள்  சிந்தித்தே செயல்படவேண்டும் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.